இலவச உணவு தானிய திட்டம் நீடிக்கப்படுமா? மத்திய அரசு கூறுவதென்ன?

இலவச உணவு தானியங்கித் திட்டம் நீடிக்கப்படுவது தொடர்பாக பிரதமர் மோடி முடிவு எடுப்பார் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Update: 2022-12-24 03:13 GMT

இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அந்த உரிய காலகட்டங்களில் பல்வேறு நபர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்த காலங்களில், மேலும் வருமானம் என்பது கிடைக்காமல் ஒரு சூழல்தான் ஏற்பட்டு இருந்தது. குறிப்பாக ஏழை எளிய மக்களை இந்த ஊரடங்கு பாதித்து விடக்கூடாது என்ற காரணத்திற்காக, கடந்த 2020 ஏப்ரல் மாதம் முதல் கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியது. இந்த கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் கீழ் ஏழைகளுக்கு சுமார் ஐந்து கிலோ கோதுமை மற்றும் அரிசி இலவசமாக வழங்குவதை மத்திய அரசு ஊக்குவித்தது.


ரேஷன் கடைகளில் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இந்த திட்டம் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டது. இந்நிலையில் மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் ஷோபா கரத்தலாஜா நேற்று செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, கரிப் கல்யாண் அன்னை யோஜனா திட்டம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. கடந்த 2020 ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மத்திய அரசின் அறிவுறுத்தலின் மீது தற்போது 2022 டிசம்பர் வரை நீடிக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. மேலும் இதை நீடிப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முடிவு எடுப்பார்.


இந்த திட்டத்திற்கு கடந்த 28 மாதங்களில் மத்திய அரசு ரூபாய் 1.80 லட்சம் கோடி செலவு செய்து இருக்கிறது. உணவு பாதுகாப்பு சட்டம் மற்றும் பிறநலத்திட்டங்களின் கீழ் தேர்வுகளை பூர்த்தி செய்ய போதுமான உணவு தானியங்கள் அரசிடம் தற்பொழுது கையிருப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பொது விநியோகத் திட்டம் மற்றும் நலத் திட்டங்களுக்கான உதவி தானியங்கள் கொள்முதல் செய்யும் பணி சீராக நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்து இருக்கிறார்.

Input & Image courtesy: Thanthi

Tags:    

Similar News