எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் பசுவதைத் தடை மசோதா கர்நாடகாவில் நிறைவேற்றம்.!

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில் பசுவதைத் தடை மசோதா கர்நாடகாவில் நிறைவேற்றம்.!;

Update: 2021-02-09 17:49 GMT

கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் கட்சிகளின் எதிர்ப்புக்கு இடையில், சட்டமேலவையில், ஆளும் பாஜக அரசு பசுவதைத் தடை மசோதாவை நிறைவேற்றியது.

கர்நாடகா மாநிலத்தில் பசுக்களை அதிகமாக கொன்று வருகின்றனர். இந்துக்கள் பசுக்களை புனிதமாக வணங்கி வரும் வேளையில் இறைச்சிக்காக சிலர் பசுக்களை கொன்று வருவது, இந்துக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த கர்நாடகா சட்டப்பேரவையில் பசுவதை தடைச்சட்டம் கொண்டுவர வேண்டும் என்று இந்துக்கள் அனைவரும் குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து கர்நாடக அரசு கடந்த மாதம் ஜனவரி 8ம் தேதி பசுவதைத்தடுப்பு சட்டம் அவசர சட்டமாக பிறப்பிக்கப்பட்டது. 

இந்நிலையில், ஜனவரி 8 அன்று கர்நாடக அரசால் கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் தற்போது நிரந்தர சட்டமாக மாறியுள்ளது. இந்த சட்டத்தின் மூலமாக கால்நடை கொல்வது சட்டவிரோதமாகும். இந்த தடைச்சட்டம் நிறைவேற்றியதற்கு அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Similar News