கர்நாடக: கால்நடை படுகொலை செய்வதற்கு எதிராகக் கடுமையான தண்டனையுடன் புதிய சட்டம்.!

கர்நாடக: கால்நடை படுகொலை செய்வதற்கு எதிராகக் கடுமையான தண்டனையுடன் புதிய சட்டம்.!

Update: 2020-12-10 12:08 GMT

புதன்கிழமை அன்று கால்நடைகள் படுகொலை செய்வதைத் தடுக்கவும் மற்றும் அதனைப் பாதுகாக்கவும் புதிய சட்டத்தைக் கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த சட்டத்தில் 13  வயதுக்கு மேற்பட்ட எருமை மாடுகளைத் தவிர மற்ற கால்நடைகளைப் படுகொலை தெய்வதத்திற்குத் தடை விதித்து சட்டம் இயற்றியது.

கர்நாடக கால்நடைத் துறை அமைச்சர் பிரபு சவான் கால்நடை படுகொலை தடுப்பு மற்றும் கால்நடை பாதுகாப்பான மசோதாவைத் தாக்கல் செய்தார். இந்த புதிய சட்டத்தின் மூலம் மாடுகள் படுகொலை செய்யப்படுவது குற்றமாகக் கருதப்படுவது மட்டுமல்லாமல், மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும் அளிக்கின்றது.

அதைத் தவிர விதியை மீறுபவருக்கு ஒரு கால்நடைக்குத் தல 50,000 அபராதமும் அளிக்கிறது. மேலும் படுகொலை செய்வதற்கான நோக்கத்தில் கால்நடைகளை மாநிலத்தில் உள்ளே மற்றும் வெளியே கொண்டுசெல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

படுகொலை செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் சந்தேகத்திற்குரிய வாகனங்களைப் பறிமுதல் செய்வதற்கும் தேடுதல் பணியில் ஈடுபடுவதற்கும் எந்த ஒரு அதிகாரிகளுக்கும் அதிகாரம் உண்டு என்பதையும் இந்த சட்டம் தெரிவிக்கின்றது. மேலும் புதிய சட்டத்தை மீறுவது போன்ற வழக்குகளை விரைவில் முடிக்க விரைவு நீதிமன்றத்தை அமைக்கவும் முடிவு.

இந்த குற்றத்தை இரண்டாவது முறையாகச் செய்பவர்களுக்கு ஏழு ஆண்டுகளுக்குக் கீழான சிறைத் தண்டனை அளிக்கப்படாது மற்றும் ஒரு கால்நடைக்கு தலா 1 லட்சம் முதல் 10 வரை அபராதமும் விதிக்கப்படும். இந்த தடையில் 13 வயதுக்குக் கீழ் உள்ள எருமைகள், மாடுகள், கன்றுகள் மற்றும் காளைகள் போன்றவை படுகொலை செய்யப்படுவது அடங்கும். இதில் 13 வயதுக்கு மேற்பட்ட எருமைகள், நோயுற்ற கால்நடைகள் மற்றும் ஆராய்ச்சிக்கு உட்பட்டவை போன்றவற்றுக்கு விலக்கு அளிக்கப்படுகின்றது.  

Similar News