ஆஞ்சநேயர் கோவில் இருந்த இடத்தில் ஜாமியா மசூதி - இந்திய வரலாறே மாற்றி எழுதப்படலாம்!

Update: 2022-05-17 05:47 GMT

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட வேண்டும் என்று இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

மசூதி முதலில் ஒரு கோவிலாக இருந்ததாகவும், அது மசூதியாக மாற்றப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். மசூதிக்குள் பூஜை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மசூதி ஒரு கோவிலின் மீது கட்டப்பட்டது என்பதை நிரூபிக்கும் வரலாற்று சான்றுகள் உள்ளன என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் மசூதி வளாகத்தில் உள்ள குளத்தில் குளிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1784-ம் ஆண்டுக்கு முன்பு இந்த இடத்தில் இந்து கோவில் ஒன்று இருந்ததாகவும், அதை திப்பு சுல்தான் இடித்துவிட்டு மசூதியை கட்டியதாகவும் கூறப்படுகிறது.

மசூதி அமைந்துள்ள பகுதியில் ஆஞ்சநேயர் சிலைகள் இருந்ததற்கான ஆதாரங்கள், தடயங்கள் கிடைத்திருப்பதாகவும், அதனால் அங்கு ஆஞ்சநேயர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் பஜ்ரங்தள் உள்ளிட்ட இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

கோபுரங்கள், கொடிமரம், குளம் உள்ளிட்டவைகள் இருப்பதாகவும், கலசங்கள் இருந்ததாகவும் இந்து அமைப்புகள் கூறி வருகின்றன. பாபர் மசூதி போல ஜாமியா மசூதி விவகாரமும் கோர்ட்டுக்கு செல்லும் என்று இந்து அமைப்புகள் தெரிவித்துள்ளன. 

கடந்த 1935ஆம் ஆண்டு ஆய்வின்படி ஜாமியா மசூதி இருந்த இடத்தில் இந்து கோவில் இருந்ததற்கான அடையாளங்கள் உறுதி செய்யப்பட்டது. இதற்கான சாட்சி மைசூருவில் உள்ள நூலகத்தில் அரசிதழில் உள்ளது.

Inputs From: TimesnowNews

Similar News