இயற்கை விவசாய கொள்கையில் கர்நாடகம் முதலிடம்.. முதலமைச்சர் எடியூரப்பா பெருமிதம்.!

இயற்கை விவசாய கொள்கையில் கர்நாடகம் முதலிடம்.. முதலமைச்சர் எடியூரப்பா பெருமிதம்.!

Update: 2020-12-12 09:18 GMT

குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பது மற்றும் மண் பரிசோதனை செய்யும் எந்திரங்கள் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற்றது. இதில் கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதன் பின்னர் அவர் பேசியதாவது: உலர்ந்த குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பூசிரி மற்றும் உடனே மண் பரிசோதனை செய்யும் பூமித்ர எந்திரங்களின் செயல்பாட்டை தொடங்கி வைத்துள்ளேன். இயற்கை விவசாய முறை, சுற்றுச்சூழலில் உள்ள அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கிறது. இயற்கையாக கிடைக்கும் வளங்களை கொண்டு விவசாயம் செய்வது தான் இயற்கை விவசாயத்தின் அடிப்படை உரிமை.

ரசாயன பயன்பாட்டால் மண்ணின் சுகாதாரம் கெட்டுப்போகிறது. மண் சுகாதாரத்தை பாதுகாக்க இயற்கை விவசாயம் செய்வதுதான் நமக்கு ஒரே வழி.
மத்திய அரசின் பட்ஜெட்டில் இயற்கை விவசாயத்திற்கு அதிக ஊக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடக அரசும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், இது குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இயற்கை விவசாய கொள்கையை வகுத்த முதல் மாநிலம் கர்நாடகம் என்று கூறுவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். புதிய ஆராய்ச்சிகள் மூலம் விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
 

Similar News