காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 குடிமக்கள் காயம்!

காஷ்மீர்: பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 7 குடிமக்கள் காயம்!

Update: 2021-01-03 07:05 GMT
சனிக்கிழமை அன்று ஜம்மு & காஷ்மீரில் புல்வாமா மாவட்டத்தில் ட்ரால் பேருந்து நிலையத்தில் வைத்துப் பாதுகாப்புப் படையினர் மீது பயங்கரவாதிகள் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியதில் ஏழு பொது மக்கள் காயமடைந்துள்ளார்.

குண்டு வீச்சில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டன மற்றும் அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். "காயமடைந்தவர்களின் உயிர் நிலைகள் தற்போது சீராக உள்ளது," என்று ஜம்மு&காஷ்மீர் காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலானது ஸ்ரீநகரில் ஹரி சிங் பகுதியில் உள்ள கைக்காரர் மீது தாக்குதல் நடைபெற்ற பின் இரண்டு நாட்களுக்குப் பின்பு நடந்துள்ளது. 

காவல்துறை அறிக்கையின் படி, கடைக்காரர் படுகாயம் அடைந்த பிறகு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அந்த அறிக்கையின் முதல் கட்ட விசாரணையில் காயம் அடைந்த நபர் நகை வியாபாரி என்றும் அவருக்குத் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் கடந்த வாரம் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கோவிலில் நடைபெறவிருந்த பயங்கரவாத தாக்குதலை முறியடித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்த விருந்த பயங்கரவாதிகளிடம் இருந்து ஆறு குண்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதில் மூன்று பயங்கரவாதிகளையும் கைது செய்தனர். மூன்று பேர்களைக் கைது செய்து விசாரித்த பின்னர் பாதுகாப்புப் படையினருக்கு முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளது. அதன் கீழ் பாதுகாப்புப் படையினர் கையெறி குண்டுகள் மற்றும் முக்கிய ஆவணங்கள், J-K கசவாணி படையின் சுவரொட்டிகள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளனர்.

Similar News