காஷ்மீர்: நடப்பு ஆண்டில் 130க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் !

காஷ்மீரில் நடப்பு ஆண்டில் மட்டும் 130க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் டிஜிபி விஜயகுமார் கூறியுள்ளார்.

Update: 2021-11-13 16:23 GMT

காஷ்மீரில் நடப்பு ஆண்டில் மட்டும் 130க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக அம்மாநில போலீஸ் டிஜிபி விஜயகுமார் கூறியுள்ளார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் அத்துமீறி நுழைவது வாடிக்கையாக இருக்கும். அது போன்றவர்களை பாதுகாப்பு படைகள் சுட்டுக்கொலை செய்தும், அவர்களை கைது செய்தும் வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாதிகள் குறித்து காஷ்மீர் மாநில டிஜிபி விஜயகுமார் பேசும்போது, ஸிராஸ் மவ்லவி மற்றும் யாவர் பட் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் ஸிராஸ் கடந்த 2016ம் ஆண்டு பல பொதுமக்களை கொலை செய்துள்ளதாக கூறினார்.

மேலும், ஸ்ரீநகரில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட மற்றொரு பயங்கரவாதி அமீர் ரியாஸ் உள்ளிட்ட பலரும் பயங்கரவாத அமைப்புகளின் உயர்மட்டத் தளபதிகள் உள்ளிட்ட சுமார் 133 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக கூறினார். இது போன்ற என்கவுன்டர்கள் தொடர்ந்து நடைபெறும் எனவும், பொதுமக்களை அச்சுறுத்தும் அனைத்து பயங்கரவாத அமைப்புகளையும் சுட்டுத்தள்ளுவோம் என்று கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Polimer


Tags:    

Similar News