காஷ்மீரில் அட்டூழியம்: வெளி மாநில அப்பாவி தொழிலாளர்களை குறிவைத்து கொல்லும் பயங்கரவாதிகள்!

காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களாக பயங்கரவாதிகள் அப்பாவி வெளிமாநில தொழிலாளர்களை சுட்டுக் கொல்லும் போக்கு தொடர்கிறது. இதற்கு முன்னர் 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இரண்டு பேரை சுட்டுக்கொன்றனர்.

Update: 2021-10-18 02:19 GMT

காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களாக பயங்கரவாதிகள் அப்பாவி வெளிமாநில தொழிலாளர்களை சுட்டுக் கொல்லும் போக்கு தொடர்கிறது. இதற்கு முன்னர் 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில், போலீஸ் மற்றும் ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இரண்டு பேரை சுட்டுக்கொன்றனர்.

காஷ்மீரில் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த பிரபலமான மருந்தாளுனர் உட்பட பலர் கொல்லப்பட்டனர். அதில் பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து பிழைப்பு தேடி காஷ்மீருக்கு வேலை பார்க்க வந்தவர்களும் கொல்லப்பட்டனர். சமீபகாலமாக வன்முறையை தூண்டுவதற்காக பயங்கரவாதிகள் திட்டமிட்டு இது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருவதாக அம்மாநில போலீசார் கூறுகின்றனர். 


அது போன்ற தாக்குதலை அடுத்து அம்மாநிலத்தில் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக ராணுவம் மிகப்பெரிய தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 9 என்கவுன்டர் சம்பவங்களில் 13 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதுவரை பிரிவினைவாத குழுக்களுடன் தொடர்பில் உள்ள 900 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். இருந்த போதிலும் நேற்று உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சாகிர் அகமது எனும் தச்சு தொழிலாளி பீகாரை சேர்ந்த அரபிந்த் குமார் என்பவர் புல்வாமா பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அதாவது வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் காஷ்மீருக்குள் வருவதற்கு பயப்பட வேண்டும் என்பதற்காகவே போலீசார் கண்ணில் தூவிவிட்டு இதுபோன்ற தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தி வருகின்றனர். இதனால் வெளிமாநில தொழிலாளர்களுக்கு இந்திய ராணுவம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அனைவரும் ராணுவ முகாம்கள் மற்றும் போலீசார் முகாம்களுக்கு வரவேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு. இதன்பின்னர் பயங்கரவாதிகளை ராணுவம் வேட்டையாடும் என தெரியவருகிறது.

Source: Dinamalar

Image Courtesy: The Indian Express

https://www.dinamalar.com/news_detail.asp?id=2869997

Tags:    

Similar News