காஷ்மீர்: ஒரே இரவில் நடந்த தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

காஷ்மீர்: ஒரே இரவில் நடந்த தாக்குதலில் மூன்று தீவிரவாதிகள் சுட்டுக் கொலை!

Update: 2020-12-30 15:31 GMT

செவ்வாய்க்கிழமை மாலையில் இருந்து நடத்த 18 மணி நேரம் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில், பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த வெற்றியாக  மூன்று பயங்கரவாதிகள்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையானது ஸ்ரீநகர் லாவேபோரா பகுதியில் நடைபெற்றது. இன்னும் தேடுதல் நடவடிக்கை நடந்து கொண்டிருக்கின்றது என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் காவல்துறை அறிக்கையின் படி, பயங்கரவாதிகள் இருப்பு குறித்து காவல்துறைக்கு மற்றும் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் படி செவ்வாய்க்கிழமை மாலை தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு துப்பாக்கிச் சூடு நடைபெற்றது  என்று தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்தை உறுதி செய்த காஷ்மீர் IGP விஜய் குமார்,"நடவடிக்கையில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் சடலங்கள் கைப்பற்றப்பட்டன. அவர்களின் அடையாளங்களும் கண்டறியப்பட்டு வருகின்றது," என்று அவர் தெரிவித்தார். 

மேலும் துப்பாக்கிச் சூடானது செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொடங்கப்பட்டது, மேலும் இன்று காலை ஸ்ரீநகர் பாரமுல்லா நகரின் நெடுஞ்சாலையில் பகுதியில் முடிவடைந்தது என்று அவர் கூறினார். மேலும், "பயங்கரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதைக் கண்டறிந்து அவர்கள் இருந்த இடத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இருட்டு அதிகமாக இருந்ததால் தாக்குதல் நிறுத்திவைக்கப் பட்டிருந்தது," என்று காவல் அதிகாரி கூறினார். 

செவ்வாய்க்கிழமை அன்று பயங்கரவாதிகள் இருப்பது குறித்துக் கிடைத்த தகவலின் பெயரில், காவல் துறை மற்றும் CRPF வீரர்கள் இணைந்து ஸ்ரீநகர் லாவேபோராவில் நோயிராபத் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டது என்று கூறினார். 

Similar News