இந்தியாவுடன் பாகிஸ்தானை இணைக்க ராகுல் முயற்சிக்கலாமே - அசாம் முதல்வர்

இந்தியாவுடன் ஆன பாகிஸ்தானை இணைக்கும் முயற்சியை ராகுல் காந்தி செய்ய வேண்டும் என்று அசாம் முதலமைச்சர் கிண்டல் செய்துள்ளார்.

Update: 2022-09-09 04:41 GMT

இந்தியாவை இணைப்போம் என்று சொல்லிக்கொண்டு இந்திய ஒற்றுமை பயணம் என்ற பெயரில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று பயணத்தை தொடங்கியுள்ளார். இதை ஒட்டிப் பா.ஜ.க ஆளும் அசாம் மாநில முதல் மந்திரி ஹஸ்ந்த பில்லா சர்மா இது பற்றி கூறுகையில், ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் இந்த நூற்றாண்டின் வேடிக்கை. ஏனென்றால் இந்தியா ஒரே நாடு. அது ஒன்றுபட்டுள்ளது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் ஒரே நாடாக இந்தியா இன்று ஒன்றுபட்டு உள்ளது, ஒருங்கிணைப்புக்கு அவசியம் இல்லை.


1947 ஆம் ஆண்டு பாகிஸ்தானை உருவாக்குவதற்காக நாட்டின் பிரிவினை ஏற்பட்டது. பின்னர் வங்காள தேசமும் உருவானது. ராகுல் காந்தியை தனது மூதாதையர் உருவாக்கிய பிரச்சினைகள் வருத்தம் இருந்தால் அல்லது மன்னிப்பு கேட்க விரும்பினால், அவர்கள் பிளவுபடாது இந்தியாவை உருவாக்குவதற்கு இந்தியாவுடன் பாகிஸ்தானையும் வங்காளத்தையும் இணைக்க முயற்சிக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.


இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்திலும் பதிவிலும், பதிவிட்டுள்ள பதிவிலும் "காங்கிரஸ் ஒப்புக் கொண்டதால் தான் 1947 இல் இந்தியா பிரிக்கப்பட்டது. காங்கிரஸ் ஒருங்கிணைப்பு விரும்பினால் ராகுல் காந்தி, பாகிஸ்தானில் இந்தியா ஒற்றுமை யாத்திரையை நடத்தட்டும்" எனக் கூறியுள்ளார். மேலும் இவர் காங்கிரஸிலிருந்து பா.ஜ.கவிற்கு வந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதை அசாம் காங்கிரஸ் தலைவர் பூபம் பேரா கூறுகையில், வர்க்கம், சாதி, மதம் பிளவு பட்டுள்ள மக்களை ஒன்றிணைக்கத்தான் இந்த யாத்திரை நடக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

Input & Image courtesy: Indian TV News

Tags:    

Similar News