2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ! கேரளாவில் என்னதான் நடக்கிறது ?

மருத்துவ நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர்.

Update: 2021-08-12 00:15 GMT

கொரோனாவின் முதல் அலையின் போது நாடு முழுவது இடது சாரிகளும், மத்திய அரசை எதிப்பவர்களும் ஒன்றாக கைகோர்த்து " கேரளா மாடல் " என்ற கடல் மண்ணால் ஆன பொம்மையை உருவாக்கினார். அதாவது இந்த கொரோனா பெருந்தொற்றை கேரள மாநிலத்தை ஆளும் இடது சாரி அரசு, முழுவதும் கட்டுப்படுத்திவிட்டதாக ஒரு கூட்டமே அந்த கடல் மண்ணால் ஆன பொம்மையை பாதுகாத்துவந்தது. ஆனால் தற்போது நாடு முழுவதும் இரண்டாம் அலையை கட்டுப்படுத்திவிட்டு மூன்றாம் அலையை எதிர்கொள்வதற்கான முன்னெச்செரிக்கை எடுத்து வரும் வேலையில். இன்னும் அந்த " கேரளா மாடல் " இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதில் திணறி வருகிறது.



கேரள அரசு கோவிட் கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்நிலையில் கேரள மதுபான கழகத்திற்கு சொந்தமான 150க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை  சனி, ஞாயிறு மட்டுமின்றி விடுமுறை தினங்கள் தவிர்த்து மற்ற நாட்களில் கட்டுப்பாடுகளுடன் திறந்து பார்சல் சேவைகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது சனிக் கிழமைகளிலும் அரசுக்கு சொந்தமான மதுபான கடைகள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு பல மருத்துவ நிபுணர்களை புருவம் உயர்த்த செய்தது எற்கனவே தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வேளையில் இந்த உத்தரவு தேவையா. இந்த உத்தரவு தொற்று பரவலை தடுக்க எடுக்க படும் நடவடிக்கைகளை நீர்த்து போக செய்யாதா போன்ற கேள்விகளை மருத்துவ நிபுணர்கள் எழுப்பி வருகின்றனர்.

இது ஒரு புறம் இருக்க,

அங்கு 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. 

கேரளாவில் ஆய்வு செய்த மத்திய குழுவினர் அளித்த தகவலை தொடர்ந்து வைரஸ் தாக்கம் குறித்து ஆய்வு செய்ததில் பெருமளவு டெல்டா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வைரஸ் மாற்றமடைந்துள்ளதால் ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டபோதிலும் அவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

ஒருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அல்லது தடுப்பூசி போட்டுக் கொண்ட இருந்தாலும் வைரஸ் உருமாற்றம் அடைவதால் அதனை எதிர்கொள்ள நோய் எதிர்ப்பு சக்தி போதுமானதாக இல்லை. இது மிகவும் கவலையளிக்கக் கூடியது என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த உருமாற்றம் அடைந்த வைரஸ் வேகமாக பரவும் தன்மை கொண்டதாக இருப்பதால் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.

பத்தனம்திட்டா மாவட்டத்தில் முதல் கோவிட் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 14,974 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 5,042 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே பல்வேறு மாவட்டங்களிலும் பாதிப்பு காணப்படுகிறது. மொத்தமாக இரண்டாவது தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களில் 40 ஆயிரம் பேருக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனினும் கேரள சுகாதார அமைச்சகம் இதுகுறித்த விவரங்களை அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.

மத்திய குழு கூறிய நெறிமுறைகளையும் கடைபிடிக்காமல் தொற்று எண்ணிக்கையை வளரவிடும் "இந்த கேரள மாடல்" என்ன தான் செய்ய போகிறது என்பதை பொறுத்து இருந்து கவனிப்போம்.

Image source : Buisness Standard, Manorama, 

Hindu Tamil


Tags:    

Similar News