கேரள சிறுமி பலாத்கார வழக்கு: பாதிரியாரின் சிறை தண்டனையை உறுதி செய்த உயர்நீதிமன்றம்!

கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாதிரியாருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

Update: 2021-12-03 03:41 GMT

கேரளா மாநிலத்தில் சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பாதிரியாருக்கு சிறப்பு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையை அம்மாநில உயர்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் கோட்டியூர் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் அமைந்துள்ளது. இந்த சர்ச்சில் ராபின் என்பவர் பாதிரியாக இருந்தார். இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு சர்ச்சில் வேலை செய்ய ஆட்கள் தேவை என்று பாதிரியார் கூறியுள்ளார். இதனையடுத்து 10ம் வகுப்பு முடித்த சிறுமி ஒருவர் கம்யூட்டர் ஆப்பரேட்டராக பணியில் சேர்ந்துள்ளார். அப்போது சிறுமியை வலுக்கட்டாயமாக ராபின் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதன் பின்னர் சிறுமியும் கருவுற்றார். இந்த சம்பவம் கேரள மாநிலத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தும் என தெரிந்த ராபின், ரகசியமாக சிறுமியின் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அந்த முயற்சிகள் தோல்வியடைந்த பின்னர் கடந்த 2017ம் ஆண்டு பாதிரியார் ராபின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து சர்ச்சில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராபினை போப் பிரான்சிஸ் நீக்கி உத்தரவு பிறப்பித்தார். இதன் பின்னர் ராபின் மீதான வழக்கு தலச்சேரி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனிடையே சிறுமியும் குழந்தையை பெற்றெடுத்தார். வழக்கில் தீர்ப்பு வழங்கிய சிறப்பு நீதிமன்றம் ராபினுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

இதனை எதிர்த்து ராபின் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி ஆர்.நாராயண பிஷாரடி சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை நேற்று (டிசம்பர் 2) உறுதி செய்தார். சிறப்பு நீதிமன்றம் அளித்த 20 ஆண்டுகளில் 10 ஆண்டாக குறைத்து தீர்ப்பில் கூறியிருந்தார். மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தும் தீர்ப்பளித்தார். இதே போன்ற சம்பவங்கள் அவ்வப்போது இந்தியா முழுவதிலும் உள்ள சர்ச்களில் நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த அரசு புதிய சட்டங்களை பிறப்பிக்க வேண்டும் என்பது ஒட்டு மொத்த பெண்களின் வேண்டுகோளாகவும் இருக்கிறது.

Source: Hindu Tamil

Image Courtesy:Indiafaith


Tags:    

Similar News