கொரோனா பாதிப்பு குறையாத மாநிலம் கேரளா.. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்.!

கொரோனா பாதிப்பு குறையாத மாநிலம் கேரளா.. தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முகத்தை எங்கே வைத்துக்கொள்வார்கள்.!

Update: 2021-01-01 12:45 GMT

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு குறையாத மாநிலமாக கேரளா திகழ்ந்து வருகிறது. அம்மாநிலத்தை பார் என்று சொன்ன தமிழக எதிர்க்கட்சிகள் முகத்தை தற்போது எங்கே வைத்துக்கொள்வார்கள் என கேள்வி எழுகிறது.

இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா தொற்று ஆயிரத்திற்கும் கீழ் குறைந்து வருகிறது. அதில் தமிழகம் இடம் பெற்றுள்ளது. இதற்கு தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசு கொரோனா பரிசோதனை அதிகரித்தது மற்றும் கட்டுப்பாடுகள் கடுமையாக்கியதே காரணம் என மருத்துவ குழுவினர் கூறுகின்றனர்.

ஆனால் கேரளா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதலமைச்சராக பினராயன் விஜயன் நீடித்து வருகிறார். பொதுமக்களுக்கு போதுமான விழிப்புணர்வை அம்மாநில அரசு ஏற்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

அதே போன்று மகாராஷ்டிரா மாநிலம் இரண்டாவதாக உள்ளது. கொரோனா தொற்று குறைந்த பாடில்லை. இதற்கு அடுத்த இடத்தில் மேற்கு வங்காளம் உள்ளது. அம்மாநிலத்திலும் தொற்று எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தற்போதையை நிலவரப்படி கேரளாவில் 23.9 சதவீதம் பாதிப்பு உள்ளது. மகாராஷ்டிரா 21.7 சதவீதம், மேற்கு வங்காளம் 5.5 சதவீதம், உத்தரப்பிரதேசம் 4.9 சதவீதம், சத்தீஷ்கர் 4.8 சதவீதம், கர்நாடகா 4.7 சதவீதம், ராஜஸ்தான் 4.0 சதவீதம், குஜராத் 3.8 சதவீதம், மத்திய பிரதேசம் 3.7 சதவீதம், தமிழ்நாடு 3.3 சதவீதம், டெல்லி 2.2 சதவீதம், பீகார் 1.8 சதவீதமாக உள்ளது.

மருத்துவ வசதியில் கேரளாவை பார் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தமிழக அரசை பார்த்து கேள்வி எழுப்பியது. தற்போது இவர்கள் எங்கே முகத்தை வைத்துக்கொள்வார்கள் என கேள்வி எழுகிறது.

Similar News