கேரளாவில் ஹலால் அல்லாத உணவகத்தை திறக்க முயன்ற பெண்ணை தாக்கிய இஸ்லாமியர்கள் ! - வேடிக்கை பார்க்கும் கேரள அரசு !

Update: 2021-10-27 04:30 GMT

கேரளத்தில் ஹலால் இல்லாத கடையை திறக்க முற்பட்டதால் இஸ்லாமியர்களலால் துஷாரா அஜித் என்ற பெண் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.




 


கேரளத்தில் துஷாரா அஜித் எனும் பெண், ஹலால் இல்லாத இறைச்சி கடையை திறந்நு வெற்றிகரமாக நடத்தி வருகிறார். மேலும் அங்கு அவர் பன்றி இறைச்சியையும் விற்பனை செய்து வருகிறார். அந்த கடை வெற்றிகரமாக செயல்பட துவங்கியதை தொடர்ந்து மேலும் ஒரு கடையை காக்கநாடு எனும் பகுதியில் திறக்க திட்டமிட்டு வேலைகளை துவங்கி வெற்றிகரமாக முடித்துள்ளார்.

அதன் திறப்புவிழாவை கடந்த 25'ம் தேதி அதாவது நேற்று முன்தினம் நிர்ணயித்து கடையை திறப்பு விழாவை நடத்த முயன்றுள்ளார். அந்த சமயம் அங்கு வந்த அந்த பகுதி இஸ்லாமியர்கள் கடையை திறக்க விடாமல் அடித்து நொறுக்கியுள்ளனர். மேலும் துஷாரா அஜித்'தையும் தாக்கியுள்ளனர். இதனால் அவர் படுகாயமடைந்தார்.




 


இந்த தாக்குதலில் இருந்து துஷாரா'வை காக்க முயன்ற அவரது ஊழியர்களை காவல் துறையினர் கலவரம் ஏற்படுத்த முயன்றதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கேரளத்தில் பன்றி இறைச்சியையோ, ஹலால் அல்லாத உணவுகளையோ விற்க கூடாது என சட்டம் இல்லை ஆனால் துஷாரா அஜித் ஏதோ சட்ட விரோதமான காரியத்தை செய்தது போல் போலீசார் அவரை நடத்திவருகின்றனர். மேலும் இஸ்லாமியர் அதிகமாக வாழும் பகுதி என்பதால் அங்கு அவர்கள் இஷ்டப்படி மற்றும் மத வழக்கப்படிதான் அங்கு உணவகம் மற்றும் மக்களின் வாழ்க்கை முறை இருக்க வேண்டும் என சட்டத்தை கையில் எடுத்து கலவரம் செய்து வருகின்றனர். இதனை காவல்துறை மற்றும் கேரள அரசாங்கமும் கண்டுகொள்வதில்லை.

Twitter

Tags:    

Similar News