கடவுளின் தேசத்தை காக்க விரைந்த இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை!
கேரளாவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநிலம் முழுவதும் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. அங்கு பல்வேறு மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

அதிலும் குட்டநாடு பிராந்தியம் வெள்ளத்தில் மிதக்கிறது. கொல்லம், கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் எர்ணாகுளம் மாவட்டம், கோதமங்கலம் இடமலையாறு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஆதிவாசி கிராமம் முற்றிலும் பாதிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அந்த பகுதிக்கு தேசிய இயற்கை பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர். அதே போன்று திருச்சூர் மாவட்டம் சாலக்குடி பகுதியிலும் முகாமிட்டுள்ளனர். இதனிடையே தொடர்மழை பெய்வதை தொடர்ந்து மாநிலத்தில் மத்திய பாதுகாப்பு படையின் உதவியை கேரள மாநில அரசு கோரியுள்ளது. இதனை ஏற்று மீட்பு பணியில் இந்திய ராணுவம் மற்றும் விமானப்படை களம் இறங்கியுள்ளது.
Source: Dalily Thanthi
Image Courtesy:Hindustan Times, News 18