கேரளா RSS தொண்டர் சஞ்ஜித் கொலையில் பயன்படுத்தப்பட்ட கார், பொள்ளாச்சியில் உதிரி பாகங்களாக கண்டுபிடிப்பு !
கேரளா : பாலக்காடு மாவட்டத்தில், சஞ்ஜித் என்ற ஆர்.எஸ்.எஸ் தொண்டர், பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திருப்புமுனையாக கொலையாளிகள் பயன்படுத்திய கார் பொள்ளாச்சியில் காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சஞ்சித் என்ற 26 வயது இளைஞன் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்து தொண்டர் ஆவார். அவரும் அவரது மனைவியும் நவம்பர் 15ஆம் தேதி, கேரளா பாலக்காடு மாவட்டம் எலிப்புலி பகுதியில், இரு சக்கர வாகனத்தில் காலை 9:30 மணிக்கு சென்றுள்ளனர். அப்பொழுது எஸ்.டி.பி.ஐ என்ற இஸ்லாமிய அமைப்பை சேர்ந்தவர்கள், சஞ்ஜித்தை அவரது மனைவி முன்பே கொடூரமாக வெட்டிக் கொன்றுள்ளனர்.
இச் சம்பவம் கேரளா மட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
"ஆளும் இடதுசாரி அரசு எஸ்.டி.பி.ஐ அமைப்பை மறைமுகமாக ஆதரித்து வருகிறது" என்று பாலக்காடு மாவட்டம் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கே.எம் ஹரிதாஸ், இடதுசாரி அரசை கடுமையாக தாக்கி பேசினார். OpIndia
இக்கொலை வழக்கில் சுதீர், சதாம் மற்றும் இசாக் என்ற மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். ஆனால் அவர்கள் பயன்படுத்திய கார் காவல்துறையிடம் பிடிபடவில்லை.
அக் கார் பாலக்காட்டில் இருந்து பொள்ளாச்சி செல்லும் சாலையில் சென்றுள்ளதாக, சி.சி.டி.வி கேமரா காட்சி மூலம் காவல் துறையினர் கண்டுபிடத்தனர் . இதையடுத்து பொள்ளாச்சிப் பகுதியில் கேரள போலீஸ் விசாரணை மற்றும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இக்கொலையில் ஈடுபட்ட மேலும் சிலர் கோவையில் இருப்பதாக காவல்துறையினருக்கு யூகங்கள் எழுந்தது. இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பொள்ளாச்சியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.