விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காலிஸ்தான் அமைப்புகள்: காங்கிரஸ் MP.!

விவசாயிகள் போராட்டத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் காலிஸ்தான் அமைப்புகள்: காங்கிரஸ் MP.!

Update: 2021-01-25 11:43 GMT

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள எல்லையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை காலிஸ்தான் அமைப்புகள் தூண்டுவதாக அரசாங்கம் கூறிவந்தது. ஆனால் அந்த கருத்துக்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் மறுத்து வந்தது. தற்போது அதன் கருத்தில் மாற்று கருத்தை வெளிப்படுத்துவது போல் தோன்றுகின்றது. லூதியான மற்றும் பஞ்சாப் காங்கிரஸ் MP ரவினீட் சிங் பிட்டு, விவசாய போராட்டங்களை காலிஸ்தான் அமைப்புகள் பயன்படுத்திக் கொள்ள முயற்சி செய்கின்றது என்று தெரிவித்துள்ளார். இந்த கருத்தானது அவர் விவசாய போராட்டத்திலிருந்து விலகிச் சென்ற பின்பு வந்துள்ளது. 

"நாங்கள் காலிஸ்தான் கொடிகள் மற்றும் முழக்கங்களால் அஞ்சமாட்டோம். எங்களை அவர்கள் தாக்க முயல்கின்றனர்," என்று ரவினீட் தெரிவித்தார். மேலும் போராட்டத்தில் காலிஸ்தான் கொடிகளை ஏந்த ஆர்பாட்டக்காரர்களுக்கு 1,80,00,000 செலுத்தப்படுகின்றது என்று கூறினார். 

இதே கருத்தை முன்னர் மத்திய அரசாங்கம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தபோது, விவசாயிகளை இழிவுபடுத்துவதாகக் காங்கிரஸ் குறிப்பிட்டது. அதே நேரத்தில், காங்கிரஸ் கருத்துக்களைக் குறைத்து மதிப்பீடு செய்து வருகின்றது. ரவினீட் சிங் பிட்டு முன்னர் வன்முறை அச்சுறுத்தலை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தினார். "நாங்கள் சோர்வடைந்து எங்கள் முயற்சியைக் கைவிடுவோம் என்று அரசாங்கம் எண்ணுகிறது. ஆனால் நாங்கள் சடலங்களைக் குவிப்போம். எங்கள் இலக்கை அடைய நாங்கள் இரத்தம் சிந்துவோம்," என்று தெரிவித்தார். 
மேலும் அவர் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தவறான கருத்துக்களையும் வெளிப்படுத்தினார். கூகுள், ரிலையன்ஸ் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற நிறுவனங்கள் கோதுமைகள் பதுக்கி வருகின்றது என்று கூறி விவசாயிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தினார். 

Similar News