கலிபோர்னியாவில் தாக்கப்பட்ட மகாத்மா சிலையை மீண்டும் நிறுவ எதிர்க்கும் காலிஸ்தானியர்கள்!

கலிபோர்னியாவில் தாக்கப்பட்ட மகாத்மா சிலையை மீண்டும் நிறுவ எதிர்க்கும் காலிஸ்தானியர்கள்!

Update: 2021-02-02 11:24 GMT
சமீபத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் கலிபோர்னியாவில் டேவிஸ் நகரத்தில் மகாத்மா காந்தி சிலை தாக்கப்பட்டது. அதுகுறித்த வீடியோ மற்றும் புகைப்படங்களை கலிபோர்னியாவில் உள்ள காலிஸ் தானிய சீக்கிய இளைஞர்கள் சமூகவலைத்தளத்தில் பரப்பினர். மேலும் அவர்கள் டெல்லியில் செங்கோட்டையில் சீக்கியர்களின் கொடி நட்ட பட்டத்துக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். 
மேலும் காந்தி சிலை மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் இந்த சிலையை எதிர்க்கும் சீக்கியர்களையும் சந்தித்தனர். இதுதவிர CYSA அந்த இடத்தை அடைந்து மீண்டும் சிலை நிறுவப்பட இருப்பதற்கு எதிர்ப்புகளைத் தெரிவித்தனர். மேலும் மீண்டும் சிலை நிறுவப்பட்டால் எதிர்ப்புகளைத் தெரிவிக்கப்படும் என்றும் கூறினர். உள்ளூர் பத்திரிகையாளர்களால் போராட்டம் நடந்த புகைப் படங்கள் சமூக வலைத்தளத்தில் பரப்பப்பட்டன. 

மேலும் சிலை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் ஆபாச வார்த்தைகள் மற்றும் வன்முறையில் ஈடுபட்டதால் காவல்துறை இதில் தலையிட வேண்டியிருந்தது என்று அமெரிக்க இந்து அறக்கட்டளையின் தலைவர் சுஹாக்.A. ஷுக்லா தெரிவித்தார். மேலும் அந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த தாக்குதலைக் கொண்டாடியது மட்டுமல்லாமல், மகாத்மா காந்திக்கு எதிராக அவதூறு வார்த்தைகளையும் வெளிப்படுத்தினர். 

 

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒரு சுவரொட்டியை வைத்துக் கொண்டு மகாத்மா ஒரு "பிசாசு", "கறுப்பு எதிர்ப்பாளர்" மற்றும் பிற அவதூறு சொற்களைப் பயன்படுத்தினர். மேலும் இது போன்ற கேள்வி கூறிய சிலையைப் பூங்காவில் வைப்பது முற்றிலும் தவறு என்று Dr.பிரப்ஜோத் சிங் ஊடகத்துக்குத் தெரிவித்தார். 
மகாத்மா காந்தி சிலை மீதான தாக்குதலுக்கு முன்னர் டேவிஸ் நகரம் கண்டனங்களைத் தெரிவித்ததது. அதே நேரத்தில் இந்தியத் தூதரகமும் இந்த தாக்குதலுக்குக் குற்றவாளிகள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. 

Similar News