பிரதமர் மோடியை சந்திக்க இருக்கும் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர்: இந்தியா பூட்டான் உறவுகளின் அம்சங்கள் பற்றி ஆலோசனை!
பூட்டான் நாட்டின் மன்னர் ஜிக்மே வாங்சுக் 8 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
இந்தியா பூட்டான் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் அரசு முறை பயணமாக இந்தியா வந்த பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுங் பிரதமர் மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை நேரில் சந்திதது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த நிலையில் பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் எட்டு நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார்.
அவரை தலைநகர் டெல்லியில் மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் மற்றும் மூத்த அதிகாரிகள் நேரில் வரவேற்பார்கள் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த பயணத்தின் போது பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் பிரதமர் மோடியை சந்தித்து இந்தியா பூட்டான் இடையேயான நெருங்கிய உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது . இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது :-
பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் பூட்டான் அரசின் மூத்த அதிகாரிகளுடன் நவம்பர் 3 முதல் 10 வரை அரசு முறை பயணமாக இந்தியாவுக்கு வருகிறார். இந்தியாவும் பூட்டானும் நட்பு மற்றும் ஒத்துழைப்பின் தனித்துவமான உறவுகளை அனுபவிக்கின்றன. அவை புரிதல் மற்றும் பரஸ்பர நம்பிக்கையால் வகைப்படுத்தப்படுகின்றன. பூட்டான் மன்னனின் இந்த பயணம் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு வரம்பையும் மறு பரிசீலனை செய்வதற்கும் பல்வேறு துறைகளில் முன்மாதிரியான இருதரப்பு கூட்டான்மையை மேலும் முன்னேற்றுவதற்கும் இருதரப்புக்கும் வாய்ப்பு அளிக்கும். மன்னர் ஜிக்மே கேசர் தனது எட்டு நாள் பயணத்தில் அசாம் மராட்டியம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் செல்கிறார்.
SOURCE :DAILY THANTHI