பா.ஜ.க. பெண் நிர்வாகியின் மகள் உக்ரைனில் இருந்து 800 இந்திய மாணவர்களை மீட்டு சாதனை!

Update: 2022-03-14 03:44 GMT

உக்ரைனில் இருந்து 800 இந்திய மாணவர்களை 24 வயது பெண் விமானியும், பாஜக மகிளா மோர்ச்சாவின் தலைவியின் மகள் மீட்டு சாதனை படைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் நடத்தி வரும் தாக்குதலால் அங்குள்ள இந்தியர்களை மத்திய அரசு பாதுகாப்பாக மீட்டு வருகிறது. இதற்காக அண்டை நாடுகளுக்கு போர் விமானங்கள் மற்றும் பயணிகள் விமானங்களை அனுப்பி இலவசமாக மீட்டு வருகிறது. ஆபரேஷன் கங்கா திட்டத்தின் மூலமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களை மத்திய அரசு தாயகம் அழைத்து வந்துள்ளது.

இந்நிலையில், கொல்கத்தாவை சேர்ந்த மஹாஸ்வேதா 24 வயதான பெண் விமானி போர் நடைபெறும் உக்ரைன் அண்டை நாடுகளான போலந்து, ஹங்கேரி, நாடுகளில் இருந்து சுமார் 800 மாணவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளார். இவரை பாராட்டி பாஜக மகிளா மோர்ச்சா ட்விட் செய்துள்ளது. மேலும், பெண் விமானி மஹாஸ்வேதா, பாஜக மகிளா மோர்ச்சாவின் மேற்கு வங்காள மாநில தலைவி தனுஜா சக்கரவர்த்தியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News