கோவையில் குண்டுவைப்பது 2 ஆண்டுகளான சதித்திட்டம்: விசாரணையில் அம்பலம்!

கோவையில் குண்டு வைக்க வேண்டும் என்பது இரண்டு ஆண்டுகளாக போடப்பட்ட சதித்திட்டம் தான் விசாரணையில் அம்பலமானது.

Update: 2022-11-06 08:24 GMT

கோவையில் வெவ்வேறு இடங்களில் குண்டு வைக்க வேண்டும் என்ற சதி திட்டத்துடன் ஜமேஜா முபின் உள்ளிட்டோர் 2 ஆண்டுகளாக சுற்றி வந்தது போலீசார் விசாரணையில் தற்பொழுது தெரியவந்து இருக்கிறது. அதாவது கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அக்டோபர் 23ம் தேதி நடந்த கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முடி என்பவர் பலியாகினார். விசாரணையில் வெவ்வேறு இடங்களில் குண்டு வைக்க சதி திட்டமும், அதன் திட்டத்தின் மூளையாக இவர் செயல்பட்டதும் தெரியவந்துள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக முபின் உறவினர்கள் இருவர் உட்பட ஆறு பெயர் வைத்து கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். வழக்கை தற்பொழுது NIA அதிகாரிகள் விசாரிக்கிறார்கள். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரண்டு ஆண்டுகளாகவே இதை செய்தாக வேண்டும் என்று திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள். இலங்கையில் ஈஸ்டர் குண்டுவெடிப்பை நிகழ்த்திய பயங்கரவாதியுடன் இந்த மூவருக்கும் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் இலங்கை ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான வீடியோக்கள் பிரச்சார வீடியோக்கள் ஏராளமாக இருந்தன.


பயங்கரவாத போக்குடைய மதப் பிரச்சார வீடியோக்களும் இருந்தன. இதனால்தான் சதி திட்டத்தில் முடிவுடன், அசாருதீன் அப்சர் கான் ஆகியோருக்கும் பிரதான பங்கு இருப்பதை போலீசார் உறுதி செய்து இருக்கிறார்கள். கார் குண்டு வெடிப்பு வழக்கு விபசாரிக்கும் NIA அதிகாரிகள் நேற்று முன்தினம் கோவை மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ள ஆறு பேரையும் நேரில் சந்தித்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கு சென்னை பூந்தமல்லி சிறப்பு கோட்டிற்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் கோவை சிறையில் உள்ள கைதுகள் ஆறு பேரையும், சென்னை புழல் சிறையில் அடைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

Input & Image courtesy: BBC News

Tags:    

Similar News