கோழிக்கோடு விமான விபத்திற்கு காரணம் யார் ? அதிர்ச்சி தகவல் வெளியானது !

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கு விமானியின் தவறே காரணம் என்று விமான விபத்து விசாரணை பணியகத்தின் அறிக்கையில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update: 2021-09-12 06:30 GMT

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்திற்கு விமானியின் தவறே காரணம் என்று விமான விபத்து விசாரணை பணியகத்தின் அறிக்கையில் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி துபாயிலிருந்து கோழிக்கோட்டிற்கு வந்த விமானத்தில் 184 பயணிகளும், 6 பணியாளர்களும் இருந்தனர். அப்போது விமானம் தரையிறங்கும்போது இரண்டாகப் பிளந்து விபத்திற்குள்ளானது. அப்போது விமானி, மற்றும் துணை விமானி, பயணிகள் உட்பட 19 பேர் என்று மொத்தம் 21 பேர் உயிரிழந்தனர்.

அந்த நேரத்தில் விமானி மிகவும் சாதுர்யமாக செயல்பட்டதால் மிகப்பெரிய அளவிலான விபத்தும், உயிரிழப்பும் தவிர்க்கப்பட்டதாக அனைத்து ஊடகங்களும் தகவலை கூறியது.

இந்த விபத்து குறித்து நடத்திய விமான விபத்து விசாரணை பணியகத்தின் 257 பக்க அறிக்கை ஒரு வருடத்திற்கு பின்னர் நேற்று வெளியிடப்பட்டது. அதில் விமானத்தை தரையிறக்குவதற்கான நடைமுறையை விமானி கடைப்பிடிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே விமானம் விபத்திற்குள்ளாகியது தெரியவந்துள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Tags:    

Similar News