லாலு ஜாமீன் மனு.. 6 வாரத்திற்கு தள்ளி வைத்த நீதிமன்றம்.!

லாலு ஜாமீன் மனு.. 6 வாரத்திற்கு தள்ளி வைத்த நீதிமன்றம்.!

Update: 2020-12-11 18:56 GMT

கால்நடை தீவன ஊழல் தொடர்பாக பீகார் முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

இதில், சில வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார். தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கிடைக்காத நிலையில் அவர் தொடர்ந்து சிறையில் காலத்தை கழித்து வருகிறார். 

இந்நிலையில், கால்நடை தீவன வழக்கில் தொடர்புடைய தும்கா கருவூல நிதி மோசடி வழக்கில் ஜாமீன் கோரி ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு பிரசாத் யாதவ் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணைக்குப் பிறகு 6 வாரங்களுக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இதனால் லாலு, ஜாமீன் மீதான தீர்ப்புக்காக மேலும் 6 வாரங்கள் காத்திருக்க வேண்டும்.

இதனால் மிகவும் மன வருத்தத்தில் இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். அவர் ஏற்கெனவே மருத்துவமனையில் சில மாதங்கள் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News