மத்திய பட்ஜெட் 2023: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்யும் கடைசியான முழு பட்ஜெட் இது ஏன்?

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஐந்தாவது முறையாக தன்னுடைய முழுமையான பட்சத்தில் இன்று தாக்கல் செய்கிறார்.

Update: 2023-02-01 05:35 GMT

மக்களவையில் இன்று பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்கிறார். அடுத்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய கடைசி முழுமையாக பட்ஜெட் என்பதால் சலுகை அறிவிப்புகள் இருக்கும் என்று பல தரப்பில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று காலை 11:00 மணி அளவில் மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. தொடர்ச்சியாக பட்ஜெட்டை ஐந்தாவது முறையாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தாக்கல் செய்கிறார்.


இது காகிதம் இல்லாத பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால் இதுதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் செய்யும் முழுமையான கடைசி பட்ஜெட் ஆகும். அடுத்த ஆண்டு தேர்தலுக்கு முன்பாக இடைக்கால பட்ஜெட் தான் தாக்கல் செய்யப்படும்.


மேலும் இந்த மத்திய பட்ஜெட் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலுக்கு முந்திய கடைசி முழுமையான பட்ஜெட் என்பதால் இதில் ஏழை எளிய மக்களுக்கு பயன்பெறும் வண்ணம் பல்வேறு முக்கிய அம்சங்கள் இடம்பெறும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News