லதா மங்கேஷ்கர் மறைவு: இரண்டு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும்: மத்திய அரசு அறிவிப்பு!
பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8.12 மணியளவில் காலமானார்.
பழம்பெரும் பாடகியான லதா மங்கேஷ்கர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மும்பையில் உள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை 8.12 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 92. இவரது மறைவு மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக பிரதமர் மோடி கூறியிருந்தார்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் 1929ம் ஆண்டு லதா மங்கேஷ்கர் பிறந்தார். இவர் தனது 13 வயதில் இசைத்துறையில் அறிமுகமானார். இவரது இனிமையான குரலில் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தார். இந்திய இசையில் தனி ராஜ்ஜியத்தை நடத்தி வந்தார் என்பது யாராலும் மறக்க முடியாது. தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளிலும் 36 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடலை பாடியுள்ளார். இவருக்கு பத்ம விபூஷன், தாதா சகேப் பால்கே, பாரத் ரத்னா உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், லதா மங்கேஷ்கரின் இறுதி சடங்குகள் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று மகாராஷ்டிரா அரசு கூறியுள்ளது. மேலும், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகின்ற வகையில் நாடு முழுவதும் இரண்டு நாட்கள் தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi