லஸ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜம்மு வில் கைது!

லஸ்கர்-இ-முஸ்தபா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜம்மு வில் கைது!

Update: 2021-02-09 13:42 GMT

ஜம்மு&காஷ்மீர் காவல்துறை பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ்-இ-முஹம்மத்தின் ஒரு பகுதியான லஸ்கர்-இ-முஸ்தபா அமைப்பின் தலைவரான ஹிதாயத்துல்லாஹ் மாலிக்கை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கையானது ஜம்மு மற்றும் அனந்த்நாக் காவல்துறையால் இணைந்து நடத்தப்பட்டுள்ளது. 


ஜம்முவின் குஞ்ச்வாணி பகுதியில் வைத்து பயங்கரவாத அமைப்பின் தலைவரான ஹிதாயத்துல்லாஹ் மாலிக் கைது செய்யப்பட்டார். அவரை கைது செய்யும் போது காவல்துறை மீது தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

"சனிக்கிழமை மதியம் 3.30 மணியளவில் குஞ்ச்வாணி  பகுதியில் ஜம்மு காவல்துறையால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நடவடிக்கையின் போது, பயங்கரவாதி காவல்துறை மீது தாக்குதல் நடத்தித் தப்பிக்க முயற்சிகளை மேற்கொண்டான். காவல்துறை தந்திரமாகச் செயல்பட்டு மக்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதியிலிருந்து அவனைக் கைது செய்தது. அவனிடம் இருந்து துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது," என்று ஜம்முவின் SSP ஸ்ரீதர் படேல் தெரிவித்தார். 

மேலும் இந்த அமைப்பில் தொடர்புடைய நான்கு பயங்கரவாதிகள் முன்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த கைது நடவடிக்கையின் போது ஹிதாயத்துல்லாஹ் மாலிக் ஜம்மு நகரில் மிகப்பெரிய தாக்குதலை நடந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. மே 2020 இல் புல்வாமாவில் நடைபெற்ற குண்டு வெடிப்பு தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் பத்து பயங்கரவாதிகளுள் மாலிக் ஒருவர் ஆவார். 


கிடைத்துள்ள தகவலின் படி, இந்த தொடர் கைது நடவடிக்கையில் 2021 ஜனவரி 18 இல் அயாஸ் பாட் கைது செய்யப்பட்டான். அவனிடமிருந்து காவல்துறை துப்பாக்கியைப் பறிமுதல் செய்தது. கைது செய்யப்பட்ட பயங்கரவாதியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து மீர் மற்றும் சாகிர் இடூ கைது செய்யப்பட்டான். அவர்களிடம் இருந்து இரண்டு கையெறி குண்டுகளை காவல்துறை பறிமுதல் செய்தது. 

Similar News