தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து.!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகைக்கு தலைவர்கள் வாழ்த்து.!

Update: 2021-01-13 11:03 GMT

போகி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் துணை ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பொங்கல் திருவிழாவின் தொடக்கமாக போகிப் பண்டிகை இன்று (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகையை நாடு முழுவதும் லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல் உள்ளிட்டவைகளாக இந்துக்கள் கொண்டாடுவது வழக்கம்.

இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: லோஹ்ரி, மகர சங்கராந்தி, பொங்கல், போகி கொண்டாடும் குடிமக்களுக்கு வாழ்த்துகள். இந்த விழாக்கள் நம் சமூகத்தில் அன்பு, பாசம் மற்றும் நல்லிணக்கத்தின் பிணைப்பை வலுப்படுத்தி, நாட்டில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் அதிகரிக்கட்டும். இவ்வாறு அவர் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வாழ்த்து செய்தியில்: அனைவருக்கும் லோஹ்ரி, போகி வாழ்த்துக்கள். இந்த திருவிழாக்கள் அவற்றின் வண்ணமயமான தன்மைக்கு பெயர் பெற்றவை மற்றும் நல்ல அறுவடை மற்றும் இயற்கையின் அருளைக் குறிக்கின்றன. அனைவருக்கும் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றைக் கொண்டுவரட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
 

Similar News