பிரைவசியை விட்டுத்தள்ளுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்!

பிரைவசியை விட்டுத்தள்ளுங்கள்! வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்!

Update: 2021-01-20 08:32 GMT

வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், வாட்ஸ் அப் எண் மற்றும் லொகேசன் உள்ளிட்டவை பேஸ்புக் நிறுவனத்துக்கு பகிர்ந்துக் கொள்ளப்படும் என கூறப்பட்டது. புதிய நிபந்தனைக்கு உட்படாதவர்கள் பிப்ரவரி 8ம் தேதி முதல் தங்கள் தகவல்களை இழந்துவிடுவார்கள் எனவும் அந்நிறுவனம் எச்சரிக்கை செய்தது.

இந்த அறிவிப்புக்கு வாட்ஸ்அப் பயனாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. தங்களுடைய தகவல்களை வாட்ஸ்அப் நிறுவனம் திருடுகிறது என பல நாடுகளில் உள்ள பயனர்கள் குற்றம்சாட்டினர். இதனால் பயனர்கள் வேறு தளத்திற்கு மாறத்தொடங்கினார்கள். இதனால் வாட்ஸ்அப் செயலிகளை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமானோர்கள் நீக்கினார்கள்.

இதனால் அதிர்ச்சியடைந்த வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது செயலிகள் மிகவும் பாதுகாப்பானவை. யாருடைய தகவல்களும் திருடப்படாது என்ற விளக்கத்தை அனைவருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும் வைக்கப்பட்டது. ஆனாலும் பயனர்கள் இதனை நம்புவதற்கு தயாராக இல்லை.

இந்நிலையில், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. அதில் வாட்ஸ்அப்பின் புதிய விதிகள் மிகுந்த கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளது. மேலும் தனிநபர் தகவல் பாதுகாப்பு தொடர்பான 10 கேள்விகளை எழுப்பியுள்ளது. தங்களது புதிய கொள்கையை திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளது. இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளும் வாட்ஸ்அப் நிறுவனத்தின் புதிய கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Similar News