நாளை முதல் இலவசமாக பேசலாம்.. ஜியோ நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு.!
நாளை முதல் இலவசமாக பேசலாம்.. ஜியோ நிறுவனத்தின் அசத்தல் அறிவிப்பு.!
நாளை முதல் ஜனவரி 1ம் தேதி முதல் ஜியோவிலிருந்து பிற நெட்வொர்க்குகளுக்கும் இலவசமாக பேசலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நெட்வொர்க் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவிலிருந்து இந்தியாவில் உள்ள பிற நெட்வொர்க்குகளுக்கு செய்யும் அனைத்து குரல் அழைப்புகளும் ஜனவரி 1 முதல் இலவசமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது.
தற்போது ஜியோ நிறுவனம் பிற நெட்வொர்க்குகளின் அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணம் வசூலிக்கிறது.
மேலும், ஜியோ ஏற்கனவே தனது ஜியோ விலிருந்து ஜியோவிற்கு செய்யும் அழைப்புகளுக்கு கட்டணம் எதுவும் வசூலிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.