பலவீனமான பிரிவினரே மதமாற்ற இலக்கு - உமர் கெளதமுக்கு மன்னிப்பே கிடையாது என அறிவித்த நீதிமன்றம்!

Update: 2022-05-11 01:56 GMT

கடந்த ஆண்டு ஜூன் மாதம் உத்தரப் பிரதேச ஏடிஎஸ் அமைப்பால் முறியடிக்கப்பட்ட மதமாற்ற மோசடி தொடர்பாக கைது செய்யப்பட்ட முகமது உமர் கெளதமின் ஜாமீன் மனுவை லக்னோ நீதிமன்றம் நிராகரித்தது .

லா பீட் அமைப்பு வெளியிட்ட தகவல் படி, சிறப்பு என்ஐஏ நீதிபதியான ஷிவானி ஜெய்ஸ்வால், உமர் கவுதமுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தீவிர தன்மையை காரணம் காட்டி அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டார்.

குழந்தைகள், பெண்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட சமூகத்தின் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரை அடையாளம் கண்டு, அவர்களின் மத நம்பிக்கையின் மீது வெறுப்பை ஏற்படுத்துவதன் மூலம் மதமாற்ற சதியில் ஈடுபட்டதாக உமர் கவுதம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்று நீதிமன்றம் கூறியது.

முகமது உமர் கௌதம் தனது ஜாமீன் மனுவில், தான் குற்றம் செய்ததாக தவறாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், அவருக்கு எதிராக ஏடிஎஸ் தரப்பில் சரியான ஆதாரம் இல்லை என்றும் கூறினார். அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளின் ஒரு பகுதியாக மத மாற்றம் செய்தேன் எனக்கூறினார். 

மேலும், அனைத்து மத மாற்றங்களும் உரிய சட்ட நடைமுறைகள் முடிந்த பின்னரே நிகழ்த்தப்பட்டன என்றும், பேச்சு அல்லது செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளியின் குடும்ப உறுப்பினர் சட்டவிரோதமாக அல்லது வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யப்பட்டதாக புகார் கூறவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், புதுதில்லி ஜாமியா நகரில் இஸ்லாமிய தவா மையம் என்ற அமைப்பை நடத்தி வரும் உமரின் ஜாமீன் மனு முற்றாக ரத்து செய்வதாக நீதிமன்றம் தெரிவிக்கிறது. உமர் கெளதமின் அமைப்பு வெளிநாட்டு நிதியைப் பெறுகிறது என்று நீதிமன்றத்தில் ஏடிஎஸ் ஆதாரங்களை சமர்ப்பித்தது. 

இந்த சட்டவிரோத நடவடிக்கைகளின் விளைவாக, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து வருவதாகவும், நாட்டின் ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பு ஆகியவை பாதிக்கப்படுவதாகவும் வாதிட்டது. உத்தரபிரதேசத்தில் 115 பேர் சட்டவிரோதமாக மதமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே சேகரிக்கப்பட்டுள்ளதாக ஏடிஎஸ் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Inputs From: Opindia 

Similar News