சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிக்கு கிடைக்கும் பெரிய வாய்ப்பு - என்ன தெரியுமா?

தீர்ப்பாயத்தின் தலைவராக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம் ஜனாதிபதி உத்தரவு.

Update: 2022-09-11 00:40 GMT

சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக தற்போது செயல்பட்டு வருபவர் தான் முனீஸ்வர் நாத் பண்டாரி வருகின்ற 12ஆம் தேதியுடன் இவர் ஓய்வு பெற இருக்கிறார் அதற்காக அன்று பிற்பகலில் அவருக்கு வலி அனுப்ப விழா உயர்நீதிமன்றம் சார்பில் நடைபெற உள்ளது இந்நிலையில் தலைமை நீதிபதி முனிஸ்வர நாத் பண்டாரையை போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோதமான பண பரிமாற்ற வழக்குகளை விசாரிக்கும் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தலைவராக நியமித்து ஜனாதிபதி உத்தரவை பிறப்பித்து உள்ளார்.


மேலும் இந்த உத்தரவு நகல் கிடைத்த 30 நாட்களுக்குள் நீதிபதி பண்டாரி பதவியேற்க வேண்டும். பிப்ரவரி 14, 2022 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி பண்டாரி செப்டம்பர் 13, 2022 அன்று ஓய்வு பெற உள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான எம்.துரைசாமி, தற்காலிக தலைமை நீதிபதியாக நியமிக்கப் பட்டுள்ளார்.


அந்த உத்தரவில் டெல்லியில் உள்ள இந்த தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை 30 நாட்களுக்குள் அவர் ஏற்க வேண்டும் அன்றிலிருந்து அவருக்கு நான்கு ஆண்டுகள் அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை அப்பதவியில் அவர் வகிப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது இதற்காக மாதம் ரூபாய் 2,50,000 லட்சம் ஊதியமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Input & Image courtesy: Livelaw News

Tags:    

Similar News