'கர்த்தர் ரட்சிப்பார்' என்றவுடன் ஷாக் அடித்த மைக் - ஞானஸ்தானம் எடுக்கும்போது பயங்கரம்!

Update: 2022-07-01 01:12 GMT

தேவாலயத்தில் ஞானஸ்தானம் எடுத்தபோது இளைஞருக்கு மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத வழிபாடுகள் என்றால் ஒவ்வொருத்தருக்கும் ஒருவிதமான வழிபாட்டு முறைகளையும், சடங்குகளையும் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் கிறிஸ்தவர்களின் வழிபாட்டு சடங்கின்படி ஞானஸ்தானம் எடுப்பது உண்டு. அதன்படி நீரில் மூழ்க செய்து, அதன் பின்னர் ஜெபம் செய்து ஞானஸ்தானம் வழங்குவது வழக்கம். ஒரு குழந்தை பிறந்தவுடன் சில மாதங்களுக்கு பின்னர் இது போன்ற ஞானஸ்தானம் செய்யப்படுவது வழக்கும். அப்படி ஒரு நம்பிக்கையின்படி இளைஞர் ஒருவருக்கு பாதிரியார் ஞானஸ்தானம் எடுக்க வைத்தபோது உயிருக்கே உலை வைத்துள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம், புனே நகரில் சலிஸ்பரி பார்க் என்ற பகுதியில் தேவாலயம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அப்படி அங்கு ஒரு இளைஞர் ஞானஸ்தானம் எடுக்க சென்றுள்ளார். அப்போது பெரிய தொட்டிக்குள் நீர் நிரப்பப்பட்டு இளைஞரை அதில் இறக்கிய பாதரியார் ஜெபம் செய்து ஞானஸ்தானம் வழங்க முற்பட்டார். அப்போது தனது ஜெபம் தேவாலயத்தில் அனைவருக்கும் கேட்க வேண்டும் என்பதால் அவர் கையிலேயே மைக் ஒன்றையும் வைத்துக்கொண்டு இளைஞரை நீரில் மூழ்க வைத்து ஞானஸ்தானம் செய்ய வைத்திருந்தார்.

ஒருமுறை நீரில் மூழ்க வைத்து பின்னர் ஞானஸ்தானம் வழங்கிய பாதிரியார் கையில் இருந்த மைக்குடன் இளைஞரின் ஈரமான உடம்பை மறுபடியம் தொட்டார். அந்த சமயத்தில் மைக்கில் ஒயர் பிசிர் இருந்ததாலும், ஈரமான உடம்பு என்பதாலும் திடீரென்று மின்சாரம் பாய்ந்து இளைஞர் தண்ணீரில் தத்தளிக்க ஆரம்பித்தார். அவருடன் சேர்த்து மைக்கும் தண்ணீரில் விழுந்தது. இதனால் அவரது நிலையை மிக, மிக மோசமான நிலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஞானஸ்தானத்தை எடுக்க வைத்த பாதிரியார் ஒரு பக்கம் பதறிபடி இருக்க, அங்கு இருந்த உறவினர்கள், நண்பர்கள் என்று அனைவரும் செய்வதறியாமல் திகைப்பில் ஆழ்ந்தனர். உடனடியாக அருகில் இருந்த ஒருவர் மைக் ஸ்டேண்டை எடுத்து மைக்கை வெளியே எடுக்க முயற்சி செய்தபோது மீண்டும் மைக் தண்ணீரில் விழுந்தது. இதன் பின்னர் மற்றொருவர் ஓடிச்சென்று மின்சாரத்தை துண்டிக்க அரைகுறை உயிருடன் இளைஞர் தப்பித்தார். இந்த சம்பவம் தேவாலயம் மட்டுமின்றி வெளியில் இருந்தவர்களையும் கொலை நடுங்க செய்தது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Abp

Tags:    

Similar News