மகாராஷ்ட்ரா: ஜிகா வைரஸ் எதிரொலி, பரிசோதனையை துரிதப்படுத்தும் சுகாதாரத்துறை !
மகாராஷ்ட்ராவில் பரிசோதனை துரிதப்படுத்தும் சுகாதாரத் துறையினர்.
முதன்முதலாக கேரளாவில் வைரஸ்களின் பாதிப்புகள் அதிகமாக இருந்தது. அங்கு இந்த தொற்று நோயின் பரவல் வேகமாகவும் பரவத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலத்திலும் ஜிகா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு முதல் முதலாக 2017ஆம் ஆண்டு குஜராத்தில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு கேரளாவில் தற்போது பாதிப்பு ஏற்பட்டது. பகல் பொழுதில் ADS வகை கொசுவால் கடிக்கப்படும் மனிதருக்கு இதன் பாதிப்பு தென்படும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் கொரோனா பெருந்தொற்று பாதிப்பின் 2வது அலையில் இருந்தே மீளாத கேரளாவில் ஜிகா வைரசின் பாதிப்பு பரவியது. அங்கு ஜிகா வைரசின் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், கேரளாவை தொடர்ந்து மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள புரந்தர் என்ற பகுதியை சேர்ந்த 50 வயது பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவரின் மாதிரிகளை பரிசோதித்ததில் ஜிகா பாதிப்புடன், சிக்குன் குன்யா வைரசாலும் அவர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதையடுத்து அப்பகுதிகளில் காய்ச்சல், முகத்தில் வலி உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை கண்டறிய வீடு வீடாக சுகாதாரத் துறையினர் செல்கின்றனர். அறிகுறி உள்ளவர்களிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஜிகா வைரஸ் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. எனவே தற்போது வைரஸ் பரவல் எதிரொலியாக சுகாதாரத் துறையினர் இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image courtesy: Zee news