மலிவு விலையில் அதிவேக ரயில் பயணங்கள் - மேக் இன் இந்தியா மூலம் சாத்தியமானது!

மேக் இன் இந்தியா திட்டத்தின் மூலம் மலிவு விலையில் அதிவேக ரயில் சேவை.

Update: 2022-08-13 10:25 GMT

பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கம் பல்வேறு நன்மைகளை மக்களுக்கு செய்துகொண்டு வருகின்றது. அந்த பகுதியை தற்போது இந்திய நாடு 75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டில் 75 புதிய மெட்ரோ ரயில்கள் குறிப்பாக அதிவேக ரயில் திட்டத்தை தொடங்க உள்ளதாக ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தது. இதனை தற்போது சாத்தியமாகி உள்ளது. மேலும், இந்த சாத்தியமற்றதை சாத்தியமாக்கி வரலாற்றை உருவாக்குவதில் ICF சென்னை பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் பிற ஊழியர்களின் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நாங்கள் பாராட்டுகிறோம் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது. 


மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் நோக்கில் பல்வேறு எதிர்க்கட்சிகளும் இது சாத்தியமா என்று கேள்வி எழுப்பியது. அதற்கு தற்போது விடை கிடைக்கும் வண்ணம் எங்களால் சாத்தியம் என்பதை மத்திய அரசு நிரூபித்துள்ளது. ரயில்வே அமைச்சர் திரு. அஷ்வினி வைஷ்ணவ் அவர்களுடைய அயராத முயற்சி, மேலும் பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியின் கீழ் மலிவு விலையில் அதிவேக ரயில் பயணங்கள் பற்றிய ஒரு பகுதியாக 'மேக் இன் இந்தியா' முன்முயற்சியின் கீழ் வந்தே பாரத்-2 எக்ஸ்பிரஸ் இந்த மாதம் தொடங்குவதற்கு தயாராக உள்ளது.


தற்போது உற்பத்தியில் உள்ள 75 ரயில்கள் அடுத்த ஆண்டு மத்தியில் இயக்கப்படும் நமது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள், தனது 2021 சுதந்திர தின உரையில், 75 அதிவேக வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவதாக அறிவித்தார். வழக்கம் போல், இந்த மாபெரும் தேசம் வழங்கக்கூடிய திறன்களைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துபவர்கள் இந்த செயல் மூலம் மத்திய அரசு மக்களுக்கு நன்மை செய்யுமாறு திகழ்கின்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டிய தருணம் ஆக இருக்கிறது. 

Input & Image courtesy: Dinamalar News

Tags:    

Similar News