இந்துக்களின் வாக்குகளை இழிவுபடுத்தி ஒதுக்கிப் பேசிய மம்தா பானர்ஜீ கட்சித்தலைவர்- வைரலாகும் வீடியோ.!

இந்துக்களின் வாக்குகளை இழிவுபடுத்தி ஒதுக்கிப் பேசிய மம்தா பானர்ஜீ கட்சித்தலைவர்- வைரலாகும் வீடியோ.!

Update: 2021-02-24 10:37 GMT
மேற்கு வங்காளத்தில் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குகளைச் சேகரிக்க, TMC தலைவர் ஒருவர் தங்கள் உறுப்பினர்களுக்கு முஸ்லீம் வாக்குகளை எப்படி வலுப்படுத்துவது என்று அறிவுறுத்தும் வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. மேலும் அவர் கடந்த சட்டமன்ற திரிணமூல் காங்கிரஸ்கு வாக்களிக்காத இந்துக்களை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார். 

இதுகுறித்த பா.ஜ.க IT பிரிவு தலைவர் அமித் மால்வியா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் TMC தலைவர், நாம் இஸ்லாமை நம்பாத ஏமாற்றுக்காரர்களான இந்துக்களுக்கு வருடத்தில் 365 நாட்களில் 364 நாட்கள் அனைத்து வசதிகளையும் வழங்கினாலும் அந்த ஒருநாளுக்காக அவர்கள் நமக்கு வாக்கினை வழங்கமாட்டார்கள் என்று கூறினார். இதனோடு நிறுத்தாமல் இந்துக்கள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்டவர்கள் அது கடந்த 2019 தேர்தலில் வெளிச்சத்துக்கு வந்தது என்று இழிவுபடுத்திப் பேசினார்.
 
மேலும் TMC தங்கள் உறுப்பினர்களுக்கு, "மொத்தமிருக்கும் 4500 வாக்குகளில் 500 வாக்குகள் நமக்குக் கிடைக்காது. மீதம் இருக்கும் 4000 வாக்குகளைப் பெற அனைத்து உத்திகளையும் செயல்படுத்த வேண்டும். அது ஒருவரின் கையை இழுத்துப்பிடித்து வாக்களிக்கச் செய்வது அல்லது அவர்களின் காலில் விழுவது போன்ற அனைத்தையும் செய்யவேண்டும்," என்று அறிவுறுத்தினார்.
 
சில வாரங்களில் மேற்கு வங்காளம் தனது 17 வது சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளது. மேலும் மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ்கு தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்வது அவசியமாகும்.

Similar News