பழங்குடி சமூகத்தின் மிகுந்த மரியாதை உள்ளது - மம்தா பானர்ஜி பல்டி

பா.ஜ.க முன்னாடியே கூறியிருந்தால் திரௌபதி முர்மு'விற்கு ஆதரவு அளித்திருப்பது பற்றி யோசித்து இருப்போம் என மம்தா பானர்ஜி பல்ட்டி அடித்துள்ளார்.

Update: 2022-07-03 07:10 GMT

பா.ஜ.க முன்னாடியே கூறியிருந்தால் திரௌபதி முர்மு'விற்கு ஆதரவு அளித்திருப்பது பற்றி யோசித்து இருப்போம் என மம்தா பானர்ஜி பல்ட்டி அடித்துள்ளார்.

ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் புதிய குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பா.ஜ.க சார்பாக திரௌபதி முர்மு வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல் கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஸ்வந்த் சின்ஹா'வை நியமித்துள்னர்.

இந்த நிலையில் இரு வேட்பாளர்களும் நாடு முழுவதும் கட்சியினரை சந்தித்து தங்களுக்கான ஆதரவை பெருக்கி கொண்டு வருகின்றனர்.

இந்த சூழலில் பா.ஜ.க திரௌபதி முர்மு அவர்களுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் பல்டி அடிக்கும் விதமாக மம்தா பேசி உள்ளார்.

அவர், பழங்குடியினர் சமூகத்தின் மீது தனக்கு மிகுந்த மரியாதை இருப்பதாகவும், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை வேட்பாளராக நிறுத்த போவதாக பா.ஜ.க முன்பே தெரிவித்து இருந்தால் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமனதாக பரிசளித்திருக்கலாம். எனவும் பா.ஜ.க எதுவும் கேட்கவில்லை எங்களிடத்தில் எனவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தங்கள் ஆதரவு யஸ்வந்த் சின்ஹா கண்டிப்பாக தோல்வி பெறுவார் என்ற சூழலில் மம்தா இப்படி பல்டி அடிக்கும் விதமாக பேசியது எதிர்க்கட்சிகள் மத்தியில் மேலும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Source - Asianet News

Similar News