கொரோனா தொற்றால் இறந்த காதல் மனைவிக்கு கோவில் கட்டி வழிபடும் கணவர்!
இந்தியாவில் மனைவிகளுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னங்கள் பல உள்ளது. அதில் மிக முக்கியமானது ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால் ஆகும். இவை உலக அதிசியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மனைவிகளுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னங்கள் பல உள்ளது. அதில் மிக முக்கியமானது ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மகால் ஆகும். இவை உலக அதிசியங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் ஆண்களின் பட்டியலில் தற்போது மத்திய பிரதேச மாநில ஷாஜபூர் மாவட்டத்தை சேர்ந்தவரும் இணைந்துள்ளார். ஷாஜபூரில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ள சம்ப்கேடா கிராமத்தை சேர்ந்தவர் நாராயண் சிங் ரத்தோர். இவரது மனைவி கீதாபாய். இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.
இந்நிலையில், கொரோனா தொற்றின் 2வது அலை ஏற்பட்டபோது நாராயண் சிங் ரத்தோர் மனைவி கீதாபாய் இறந்து விட்டார். அவரது நினைவால் ஒரு கோயில் ஒன்றை கட்டி முடித்துள்ளார். அதில் மனைவியின் உருவத்தில் சிலை ஒன்றையும் நிறுவியுள்ளார். தினமும் குடும்பத்துடன் கீதாபாய் கோயிலில் வழிபட்டு வருகிறார். காதல் மனைவிக்காக கோயில் கட்டியுள்ள புகைப்படம் இந்திய அளவில் வைரலாகியுள்ளது.
Source, Image Courtesy: Maalaimalar