உ.பி.யில் பரபரப்பு: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் நிகழ்வில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்!

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பஸ்தி மாவட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், அவர் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் ஒருவர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-10-22 13:00 GMT
உ.பி.யில் பரபரப்பு: முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் நிகழ்வில் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்!

உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பஸ்தி மாவட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில், அவர் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்னர் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் ஒருவர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது பற்றி பேசிய பஸ்தி மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, முதலமைச்சர் நிகழ்ச்சி நடைபெற்றது. அவர் வருவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு ஒரு நபர் தன்னுடைய உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் ஆடிட்டோரியத்திற்கு நுழைந்தார். அப்போது பணியில் இருந்த வட்ட அதிகாரி அவரைப் பார்த்த பின்னர் ஆடிட்டோரியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அவர் யார் என்ற அடையாளமும் போலீசார் கண்டறிந்துள்ளனர் என்றார்.

இதனிடையே போலீசாரின் அஜாக்கிரதையால் நடைபெற்றதாக 7 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Source: Puthiyathalamurai

Image Courtesy:Hindu Tamil


Tags:    

Similar News