"மன் கி பாத்" நிகழ்ச்சியில் பிரதமர் மோடி எந்த விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்று மக்களாகிய நாம் பரிந்துரை செய்யலாம் !
பிரதமர் மோடியின் மன் கி பாத் நிகழ்ச்சியில் அவர் எந்த விஷயத்தை பற்றி பேச வேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்க ஒரு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
வரும் 24-ம் தேதி ஒலிபரப்பாகவுள்ள பிரதமர் மோடியின் "மன் கி பாத்" நிகழ்ச்சியில் தான் என்ன பேசவேண்டும் என்று தாங்கள் விரும்பும் விஷயங்களை தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "இந்த மாதம் 24-ம் தேதி மன் கி பாத் நிகழ்ச்சி ஒலி பரப்பாகிறது. இந்த மாத நிகழ்ச்சிக்கு உங்கள் யோசனைகளை வரவேற்கிறேன். அவற்றை நீங்கள் நமோ செயலி அல்லது 1800-11-7800 என்ற எண்ணுக்கு அனுப்பலாம். மேலும்MyGovஎன்ற இணைய தளத்திலும் பதிவு செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்."
உலகமே அண்ணாந்து பார்க்கும் உயரத்தில் இருக்கும் நமது பிரதமர், இப்படி தன் நாட்டு மக்களிடம் இவ்வளவு நெருக்கமாக இருப்பது பாராட்டுக்குரியது.
Image : The Indian Express.