சபரிமலை செப்பேடுகளை உரிமை கொண்டாடும் மான்சூன் மவுண்கல் ! விசாரணை கோரும் பந்தளம் அரண்மனை நிர்வாகம், கேரளாவில் பரபரப்பு !
கடந்த இரண்டு வாரங்களாக கேரளாவில் பரபரப்பு தொற்றியுள்ளது, மான்சூன் மவுன்கல் என்பவர் போலி தொன்மையான பொருட்களை விற்று வருபவர், இவர் போலி தொன்மையான பொருட்களை விற்று வருகிறார் என்பது சமீபத்தில் அம்பலமானது.
ஆனால் இந்த சர்ச்சையில் இப்பொழுது ஒரு புதிய திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
மான்சூன் மவுன்கல் சபரிமலை கோவில் செப்பேடுகள் தன்னிடம் உள்ளதாக உரிமை கொண்டாடுகிறார். ஆனால் பந்தளம் அரண்மனைக் குழு இதை மறுத்து விசாரணை கோரியுள்ளுது.
பந்தளம் அரண்மனை நிர்வாக குழு தலைவர் சிவக்குமார் வர்மா இது குறித்து விசாரணை கோரியுள்ளனர் " தரவுகள் அற்ற கருத்துக்கள் ஐயப்பர் மேல் பரப்பப்படுகிறது. அது பொதுவெளிக்கு வந்துள்ளது அதனால் அந்த பொய் தரவுகளை களைய இந்த விசாரணையை முன்னெடுக்க வேண்டும்" மேலும் மவுன்கல் வைத்துள்ள செப்பேடுகளின் உண்மைத் தன்மையை அறிய இந்திய தொல்லியல் நிறுவனத்தின் உதவியோடு அறிய வேண்டும், என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மன்சூர் மவுன்கல் வைத்திருக்கும் செப்பேடுகளில் ராஜாங்க குறியீடுகளும் முத்திரைகளும் இருப்பதாக கூறி வருகிறார், ஆனால் அரண்மனையில் இருக்கும் செப்பேடுகளில் அந்த முத்திரைகள் இல்லை. ஆகையால் இதில் ஒரு தீவிர விசாரணை செய்து மான்சூன் மவுன்கலிடம் இருக்கும் செப்பேடு பொய்யானது என்று நிரூபிக்க முடியும் என்று கூறினார்.
Image : News Dictionary3