விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள்.. பா.ஜ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்.!

விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்ட்கள்.. பா.ஜ.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர்.!

Update: 2020-12-01 08:34 GMT

விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் மற்றும் மவோயிஸ்ட்கள் நுழைந்துள்ளனர் என்று பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா குற்றம் சாட்டியுள்ளார்.


டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா கூறியதாவது: டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் பிரிவினைவாதிகளான காலிஸ்தான் மற்றும் மவோயிஸ்ட்கள் நுழைந்துள்ளனர். இவர்கள் பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தானுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான அறிவிக்கையை சமீபத்தில் வெளியிட்டது. தற்போது பிரிவினைவாத சக்திகள் போராட்டத்தில் நுழைந்துள்ளதை அறிந்து டெல்லி பற்றி எரிய வேண்டும் என்ற தங்கள் ஆசையை நிறைவேற்ற துடிக்கிறது.


ஆம் ஆத்மிக்கு விவசாயிகள் மீது அக்கறை ஒன்றும் இல்லை. இதில் அவர்கள் அரசியல் ஆதாயம் தேடுகின்றனர். இவ்வாறு அவர் பேசியுள்ளார். 
ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியும் விவசாயிகளை எதிர்க்கட்சிகள் தவறாக வழிநடத்தி செல்கின்றனர் என குற்றம்சாட்டியிருந்தார். இந்த சட்டத்தால் விவசாயிகளுக்கு நன்மை மட்டுமே கிடைக்கும் என கூறியிருந்தார்.

Similar News