இஸ்ரோ உடன் களம் இறங்கும் மேப்மை இந்தியா: ஆத்மனிர்பர் பாரதத்தை உருவாக்குமா?

இஸ்ரோ உடன் களம் இறங்கும் மேப்மை இந்தியா: ஆத்மனிர்பர் பாரதத்தை உருவாக்குமா?

Update: 2021-02-13 18:51 GMT
 

 கூகுள் மேப்ஸைப் போன்றே உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு ஆப்பாக  தற்போது உள்ள 'மேப்மைஇந்தியா' உடன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ களமிறங்கியுள்ளது. அதாவது இரு நிறுவனங்களும் நேற்று வெளியிட்ட  அறிக்கையின்படி, இனிமேல்  இந்தியாவில் தயாரித்த ஒரு ஆப்பாக தற்போது உள்ள மேப்மைஇந்தியா உடன் 
இஸ்ரோவும் தனது செயற்கை கோள்களின் உதவியுடன் துல்லியமான விவரங்களை அளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மேப் மை இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான (CEO) மற்றும் நிர்வாக இயக்குநருமான ரோஹன் வர்மா கூறுகையில், "இந்த இரு நிறுவனங்களின் ஒத்துழைப்பது  இந்திய பிரதமரின் முக்கிய கனவான ஆத்மனிர்பர் பாரதத்தை மேலும் உயர்த்தும் என்றும் கூறினார். இதன் பொருளாக எதிர்காலத்தில் இந்தியாவின் ஒவ்வொரு நபர்களும் ஒருநாடு தான் தயாரித்த ஆப்புகளின் மூலம் எளிதாக வழிகளை அறிய முடியும். ஆனால் இது இந்தியாவிற்கு வெளியே தீர்வுகளை தராது" என்றும் கூறினார். எனவே நீங்கள் இனி கூகுளைப் பயன்படுத்த தேவை இருக்காது என்றும் கூறினார். வெளிநாட்டை சார்ந்த செயலிகள், இந்த சேவைகளை இலவசமாக வழங்குகிறது என கூறினாலும், அதற்கு நாம் மறைமுகமாக அதிக அளவில் பணம் செலுத்துகிறோம் என்று வர்மா கூறினார்.

இஸ்ரோ வரும் விண்வெளித்துறை(DOS) புவியியல் தொழில்நுட்ப நிறுவனமான CE இன்ஃபோ சிஸ்டம் பிரைவேட் லிமிடெட் உடன் ஒரு ஒப்பந்தத்தில் தற்போது கையெழுத்திட்டுள்ளது. இது இந்தியாவுக்கு சொந்தமானது. இதில் கூறி இருப்பது என்னவென்றால், இஸ்ரோ மற்றும் மேப்மைஇந்தியா ஆகியவை புவிசார் நிலைகளை மேம்படுத்துவதன் மூலம் ஒரு சிறந்த தீர்வுகளை உருவாக்கி, அதன் மூலம் மேப்மைஇந்தியா ஆப் பை பயன்படுத்துபவர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"இஸ்ரோவுடனான   ஒருங்கிணைந்த கூட்டாண்மை மூலம், மேக்மை  இந்தியாவை உபயோகப்படுத்துபவர்கள் இந்தியா முழுவதையும் ஒரு பறவையின் பார்வையில் இருந்து பார்க்க முடியும். மேலும் அவர்கள் வானிலை, மாசுபாடு, விவசாய உற்பத்தி மாற்றங்கள், வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பேரழிவுகள் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட பகுப்பாய்வு மற்றும் நுண்ணறிவு இந்த மேப்மைஇந்தியாவில் உள்ளதாகவும்" அவர் கூறினார். 

Similar News