ரயில் நிலையங்களில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.5,00 அபராதம்.!

ரயில் நிலையங்களில் செல்லும் பயணிகள் பெரும்பாலும் முககவசம் அணிந்து செல்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.

Update: 2021-04-17 12:16 GMT

கொரோனா வைரஸ் தொற்று 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை தினமும் 2 லட்சத்திற்கும் அதிகமாக பரவி வருகிறது. இதனால் கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், பொது வெளியில் பொதுமக்கள் முககவசம் அணியாமல் செல்கின்றனர். இதனால் தொற்று பரவலும் அதிகரித்து வருகிறது.

அதே போன்று ரயில் நிலையங்களில் செல்லும் பயணிகள் பெரும்பாலும் முககவசம் அணிந்து செல்வதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.


 



இந்நிலையில், ரயில் நிலையங்களில் முககவசம் அணியாமல் செல்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் அனைத்து மண்டல ரயில்வே துறைகளுக்கு மத்திய ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் கட்டாயம் முககவசம் அணிந்து வரவேண்டும் என்று ரயில்வேத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Similar News