குழந்தைகள் முககவசம் அணிய தேவையில்லை: சுகாதார சேவைகள் இயக்குநரகம் தகவல்.!

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்குள் கீழ் குறைந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Update: 2021-06-10 10:20 GMT

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. தினசரி தொற்று பாதிப்பு ஒரு லட்சத்திற்குள் கீழ் குறைந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

அதிலும் இரண்டாவது அலையின் தாக்கம் குறைந்து வந்தாலும், மூன்றாவது அலையின் பயம் அதிகமாகவே உள்ளது. மூன்றாவது அலை குழந்தைகளை அதிகமாக பாதிக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சுகாதார சேவைகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு முககவசம் அணியத் தேவையில்லை. 6 முதல் 11 வயதுடைய குழந்தைகள் பெற்றோர் மற்றும மருத்துவர்களின் கண்காணிப்பில் முககவசம் அணிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News