'மே 3 தான் கடைசி..!' - ஒலிபெருக்கி விவகாரத்தில் ராஜதாக்ரே விடுத்த எச்சரிக்கை

மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை வரும் மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென ராஜ் தாக்கரே கெடு விதித்துள்ளார்.

Update: 2022-05-02 07:45 GMT

மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை வரும் மே 3ம் தேதிக்குள் அகற்ற வேண்டுமென ராஜ்தாக்கரே கெடு விதித்துள்ளார்.

சமீப காலங்களில் கூம்பு வடிவ ஒலி பெருக்கி பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த சில மாநிலங்கள் மும்முரம் காட்டி வருகின்றனர், அந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் ஏற்கனவே 46 ஆயிரம் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டுள்ளன.

இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே பேசுகையில், மசூதிகளில் அதிக சத்தம் எழுப்பும் ஒலி பெருக்கிகளை அகற்ற வேண்டும் எனவும் மசூதிகளில் ஒலிபெருக்கிகளை அகற்றவில்லை என்றால் அதனருகே நவநிர்மாண் சேனா'வினர் ஒலிபெருக்கியில் அனுமன் பாடல்களை ஒளிபரப்பும் என்றும் முன்பு அறிவித்திருந்தார். இதனையடுத்து நவநிர்மாண் சேனா'வினர் பொது இடங்களில் ஒலிபெருக்கியில் அனுமன் பாடல்களை ஒலிக்கச் செய்த சம்பவங்களும் அடுத்தடுத்து அரங்கேறின.


இந்த நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள மசூதிகளில் பயன்படுத்தப்படும் ஒலிபெருக்கிகளை மே 1-ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என ராஜ்தாக்கரே கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி மும்பையில் உள்ள 72 சதவிகித இஸ்லாமிய மசூதிகள் பிரார்த்தனைக்கு ஒலிபெருக்கி பயன்படுத்துவதை நிறுத்தி விட்டதாக போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இந்த சூழலில் மகாராஷ்டிரா தின கொண்டாட்டத்தையொட்டி அவுரங்காபாத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராஜ்தாக்கரே உரையாற்றும்போது, 'மசூதிகளில் வைக்கப்பட்டு மக்களுக்கு தொந்தரவாக இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்றுவதற்கான மே 3'ம் தேதி காலக்கெடுவில் நான் உறுதியாக இருக்கிறேன், முதலில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும், இது ஒன்றும் மதப் பிரச்சினை கிடையாது இது தேசிய பிரச்சனை. ஒலிபெருக்கிகள் சட்டவிரோதமானது என சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே கூறி இருக்கிறது அதனால் மசூதிகளில் இருந்து ஒலிபெருக்கி அகற்றுவதற்கான காலக்கெடு மே 3'ம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது பிறகு என்ன நடக்கும் என்பதற்கு எல்லாம் நான் பொறுப்பு கிடையாது. ஒலிபெருக்கிகளை உடனே அகற்றுமாறு போலீசாரை கேட்டுக் கொள்கிறேன்' என்றார்.


Source - OneIndia.com

Similar News