8 மாதங்கள் கழித்து மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு.!

8 மாதங்கள் கழித்து மருத்துவ கல்லூரிகள் இன்று திறப்பு.!

Update: 2020-12-01 07:39 GMT

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் கடந்த மாதம் நவம்பர் 17ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. ஆனால் பள்ளிகளோ, மருத்துவ கல்லூரிகளோ திறக்க அரசு அனுமதி அளிக்கவில்லை.

இந்நிலையில், டிசம்பர் 1ம் தேதியில் (இன்று) இருந்து முதல் மருத்துவ கல்லூரிகளை திறக்க கர்நாடக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, கர்நாடக மாநிலம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுகிறது. 

மருத்துவ கல்லூரிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வசதிக்காக ஆன்-லைன் மூலமாகவும் பாடம் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் திறக்கப்படுவதையொட்டி மாநிலத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் கிருமி நாசினி மூலமாக சுத்தம் செய்யப்பட்டது. கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், பிற ஊழியர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அரசு கூறியுள்ளது.

மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிக்கு வரும் மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோரிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று வந்த பின்னரே அவர்கள் கல்லூரிக்குள் அனுமதிக்கப்படுவார் என கூறப்பட்டுள்ளது.

Similar News