2025க்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும்.. பிரதமர் மோடி.!

2025க்குள் 25 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும்.. பிரதமர் மோடி.!

Update: 2020-12-28 17:20 GMT

தற்போது 18 நகரங்களில் உள்ள மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இவை 2025ம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்தப்படும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இந்தியாவிலேயே முதல் முறையாக ஓட்டுநர் இல்லாத தானியங்கி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி டெல்லியில் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

37 கி.மீ. தூரம் கொண்ட மஜ்லிஸ் பூங்கா முதல் ஷிவ் விஹார் வழித்தடத்தில் அறிமுகமான இந்த ரயில் சேவையை காணொலி வாயிலாக துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் முதல் மெட்ரோ ரயில் வாஜ்பாயின் முயற்சியால் துவங்கப்பட்டது. 2014ம் ஆண்டு எங்கள் அரசு அமைந்த போது 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவைகள் இருந்தன. இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது.

2025ம் ஆண்டுக்குள் இதனை நாங்கள் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் விரிவுபடுத்த உள்ளோம். 130 கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் டெல்லி ஒரு பெரிய உலகளாவிய நிதி மற்றும் மூலோபாய சக்தியின் தலைநகராகும். இந்த மகிமை இங்கே பிரதிபலிக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம். டெல்லி மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

Similar News