இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்கள்.!

இந்திய கடற்படையின் வலிமையை மேலும் அதிகரிக்கும் எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்கள்.!

Update: 2020-12-05 09:51 GMT

எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்ட எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்க வெளியுறவுத் துறை சென்ற ஆண்டு ஏப்ரம் மாதம் முதல் வாரத்திலேயே ஒப்புதல் வழங்கியுது.

அந்நிய நாடுகளுக்கு ராணுவ தளவாடங்களை விற்கும் திட்டத்தின் கீழ், 24 என்ற எண்ணிக்கையிலான எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களை, 17 ஆயிரத்து 832 கோடி ரூபாய்க்கு கொடுக்க அமெரிக்கா வெளியுறவுத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஹெலிகாப்டர்களால், எதிரிகளின் நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அதனை பின் தொடந்து தாக்க முடியும். மேலும், எம்.எச்.60 ரோமியோ ஹெலிகாப்டர்களில், வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ஹெல் ஃபைர் ஏவுகணைகள், துல்லிய தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகள், எம்.கே. 54 ரக நீர்மூழ்கி குண்டுகள் ஆகிய ஆயுதங்கள் இருக்கும்.

அமெரிக்க நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டின் இந்திய கடற்படைக்கான எம்.எச் -60 ரோமியோ மல்டி ரோல் ஹெலிகாப்டரின் முதல் படத்தை இந்திய கடற்படையின் வண்ணங்களில் பகிர்ந்துள்ளது. 24 ஹெலிகாப்டர்களுக்கான அரசாங்க ஒப்பந்தத்தின் கீழ் இந்தியா இந்த வகை ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய உள்ளது. 

அடுத்த பத்தாண்டுகளுக்கும் மேலாக வல்லமைமிக்க நீர்மூழ்கி எதிர்ப்பு வேட்டை ஹெலிகாப்டர்கள் இந்தியாவுக்கு தேவை என்பதால் ரோமியோ வகை ஹெலிகாப்டர்களை இந்தியா கொள்முதல் செய்கிறது.

முதன்மை நீர்மூழ்கி எதிர்ப்பு போர் எதிர்ப்பு மேற்பரப்பு ஆயுத அமைப்பாக, தற்போது அமெரிக்க கடற்படையில் இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இது போர் கப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிகள் ஆகியவற்றிலிருந்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஹெலிகாப்டர்கள் இந்திய கடற்படையின் வலுவை பன்மடங்கு அதிகரிக்கும். இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சீனாவின் அத்துமீறி வாலாட்டினால் அதன் கொட்டத்தை அடக்கும் வகையில் செயல்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

Similar News