யோகாவைப் போல சிறுதானியத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் மோடி அரசாங்கம்: ஏன்?
யோகாவைப் போன்று தானியத்திற்கும் முக்கியத்துவம் உள்ளுக்கும் மோடி அரசாங்கம்.
இந்தியாவில் முதன் முதலாக தோன்றிய யோகாவிற்கு உலக அளவில் உரிய அங்கீகாரத்தில் வாங்கி கொடுத்தவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அந்த வகையில் யோகாவை அடுத்து இந்தியாவின் சிறுதானிய உலக அளவில் அவற்றை கொண்டு செல்ல வேண்டும்? என்ற நோக்கில் தற்பொழுது அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மோடி அவர்களின் சிறந்த முயற்சியின் காரணமாக ஐக்கிய நாட்டு சபையில், 2023 ஆம் ஆண்டில் சிறுதானிய ஆண்டாக அறிவித்து இருக்கிறது. இது இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி ஆகும். தற்போதைய உலகிற்கு சிறுதானிய உணவுகள் மிகவும் முக்கியம் என்பதை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உலகத்திற்கு எடுத்துக் கூறியிருக்கிறார்.
அந்த வகையில் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் தன்னுடைய உணவில் பாதியை சிறுதானிய உணவாக எடுத்துக் கொள்வதன் மூலம் தன்னுடைய ஆயுளை அதிகரிக்க முடியும் என்பதையும் அவர் முன்வைத்து இருக்கிறார். இதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு சிறுதானியங்களை அதிகரிக்க வேண்டும் மற்றும் அவற்றை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு உரிய பலனை கிடைக்க செய்யலாம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.
குறிப்பாக சிறுதானிய அரசு நிகழ்ச்சிகள், பள்ளிகள், கல்லூரிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளின் போது சர்வதேச சிறுதானிய ஆண்டை முன்னிட்டு அவர்களுடைய உணவு பட்டியலில் சிறு தானியத்தை சேர்க்க அவர்கள் முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த தருணத்தில் பாராளுமன்றததில் வழங்கப்பட்ட உணவில் கூட சிறுதானிய உணவுகள் பரிமாறப்பட்டன என்றும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
Input & Image courtesy: Maalaimalar