பயங்கரவாதிகள் அமைத்த சுரங்கம்.. பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய ராணுவம்.!

பயங்கரவாதிகள் அமைத்த சுரங்கம்.. பாகிஸ்தானுக்குள் 200 மீட்டர் தூரம் சென்ற இந்திய ராணுவம்.!

Update: 2020-12-02 06:32 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம், சம்பா துறையில் உள்ள சர்வதேச எல்லைக்கு அருகே நவம்பர் 22ம் தேதி அன்று பயங்கரவாதிகள் ஊடுருவினர். இவர்கள் எல்லைக்கு வருவதற்கு சுமார் 200 மீட்டர் ஒரு சுரங்கம் அமைத்து, அதன் வழியேதான் வந்துள்ளனர் என இந்திய பாதுகாப்பு படை சந்தேகப்பட்டது. 

இதனிடையே எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்) மற்றும் ஜம்மு- காஷ்மீர் போலீசார் இணைந்து நடத்திய நடவடிக்கையில் இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்திய பாதுகாப்புப் படையை சேர்ந்தவர்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் கிட்டத்தட்ட 200 மீட்டர் தூரம் சென்று சுரங்கப் பாதையை கண்டுபிடித்தனர். இந்த சுரங்கப்பாதை  பயங்கரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவதற்காக தோண்டியுள்ளதாக அரசாங்க உயரதிகாரிகள் தெரிவித்தனர்.


ஜம்மு காஷ்மீரில் கடந்த மாதம் 19ம் தேதி அன்று நடந்த நக்ரோட்டா என்கவுண்டரில் பாதுகாப்புப் படையினர் 4 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர். பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் வைத்திருந்த மொபைல் தொலைபேசியைக் கைப்பற்றி அதை ஆய்வு செய்தது சுரங்கப்பாதையை கண்டுபிடிக்க பாதுகாப்பு படைகளுக்கு அது பெரிதும் உதவியது.
 

Similar News